பெண்ணிடம் செயின் பறிப்பு 3 மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பெண்ணிடம் செயின் பறிப்பு 3 மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

Added : அக் 10, 2021
Share
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டையில் பெண்ணிடம் 8 சவரன் செயினை பறித்த 3 நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.உளுந்துார்பேட்டை பேரூராட்சி காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவராமன். இவர் விருத்தாசலம் சாலை சந்திப்பு அருகே பேக்கரி வைத்துள்ளார். இவரது மனைவி ராஜலட்சுமி, 40; நேற்று மாலை வீட்டின் வெளியே உட்கார்ந்திருந்தார்.4:50 மணியளவில் பைக்கில் வந்த 3 பேர் ராஜலட்சுமியிடம்

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டையில் பெண்ணிடம் 8 சவரன் செயினை பறித்த 3 நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

உளுந்துார்பேட்டை பேரூராட்சி காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவராமன். இவர் விருத்தாசலம் சாலை சந்திப்பு அருகே பேக்கரி வைத்துள்ளார். இவரது மனைவி ராஜலட்சுமி, 40; நேற்று மாலை வீட்டின் வெளியே உட்கார்ந்திருந்தார்.4:50 மணியளவில் பைக்கில் வந்த 3 பேர் ராஜலட்சுமியிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர்.

தண்ணீர் எடுக்க திரும்பும்போது திடீரென ராஜலட்சுமி அணிந்தருந்த 8 சவரன் செயினை அறுத்துக் கொண்டு பைக்கில் தப்பியோடினர்.இதுகுறித்த புகாரின் பேரில், உளுந்துார்பேட்டை போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் கொண்டு விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X