பொது செய்தி

தமிழ்நாடு

விழுப்புரம் 85.34; கள்ளக்குறிச்சி 82.59 சதவீத ஓட்டுகள் பதிவானது

Added : அக் 10, 2021
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி இரண்டாம் கட்ட தேர்தலில் 85.34 சதவீதம் ஓட்டுகள் பதிவானது.விழுப்புரம் மாவட்டத்தில் 6 ஒன்றியங்களில் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நேற்று நடந்தது. காலை 7:00 மணிக்குத் துவங்கிய ஓட்டுப்பதிவு மாலை 6:00 மணியளவில் முடிந்தது.இந்த தேர்தலில், காணை ஒன்றியத்தில் 84.66 சதவீதமும், கோலியனுார் 87.29, மயிலம் 86.22, மேல்மலையனுார் 84.74,

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி இரண்டாம் கட்ட தேர்தலில் 85.34 சதவீதம் ஓட்டுகள் பதிவானது.

விழுப்புரம் மாவட்டத்தில் 6 ஒன்றியங்களில் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நேற்று நடந்தது. காலை 7:00 மணிக்குத் துவங்கிய ஓட்டுப்பதிவு மாலை 6:00 மணியளவில் முடிந்தது.இந்த தேர்தலில், காணை ஒன்றியத்தில் 84.66 சதவீதமும், கோலியனுார் 87.29, மயிலம் 86.22, மேல்மலையனுார் 84.74, மரக்காணம் 84.94, வல்லம் 84.47 சதவீதமும் ஓட்டுகள் பதிவானது. ஒட்டுமொத்தமாக மாவட்டத்தில் 85.34 சதவீத ஓட்டுகள் பதிவானது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 82.59 சதவீத ஓட்டுக்கள் பதிவானது. மாவட்டத்தில் 5 ஒன்றியங்களில் இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று நடந்தது. தேர்தலில் 4 லட்சத்து 4 ஆயிரத்து 791 பேர் ஓட்டளித்துள்ளனர்.கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில் 83.62 சதவீதம், சின்னசேலம் 84.63, தியாகதுருகம் 81.9, சங்கராபுரம் 79.74, கல்வராயன்மலை 84.04, சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகியது. மாவட்டம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 82.59 சதவீத ஓட்டுகள் நேற்று பதிவானது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X