பொது செய்தி

தமிழ்நாடு

கோடநாடு எஸ்டேட் வங்கி கணக்குகள் முடக்கம்

Updated : அக் 10, 2021 | Added : அக் 10, 2021
Share
Advertisement
நீலகிரி: நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை வழக்கு விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. தற்போது, கோடநாடு, கர்சன் எஸ்டேட்களின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன.வரி பாக்கி நிலுவையில் இருப்பதுடன், வருமானத்துக்கு குறைவாக கணக்கு காட்டியதும் தான் இதற்கு காரணம். எஸ்டேட்களின் வங்கி கணக்குகளை முடக்கி, வருமான வரித் துறை நடவடிக்கை

நீலகிரி:
நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை வழக்கு விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. தற்போது, கோடநாடு, கர்சன் எஸ்டேட்களின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன.



latest tamil news


வரி பாக்கி நிலுவையில் இருப்பதுடன், வருமானத்துக்கு குறைவாக கணக்கு காட்டியதும் தான் இதற்கு காரணம். எஸ்டேட்களின் வங்கி கணக்குகளை முடக்கி, வருமான வரித் துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.கோத்தகிரி ஈளாடாவில் இருக்கும், 'பாங்க் ஆப் இந்தியா' வங்கியில் உள்ள எஸ்டேட்களின் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இதனால், எஸ்டேட்களில் பணிபுரியும், 700க்கும் மேற்பட்ட தோட்ட தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படாமல் இருப்பது தெரிய வந்துள்ளது.


latest tamil news


கடந்த 2017ம் ஆண்டு வருமான வரித் துறை சோதனைக்கு பின், சசிகலா மற்றும் ஜெயலலிதாவின் சொத்துக்களை முடக்க, பல்வேறு கட்ட நடவடிக்கைகளை, வருமான வரித் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.செப்., மாதம், பினாமி சட்டத்தின் கீழ் சசிகலாவுக்கு சொந்தமான, 100 கோடி ரூபாய் மதிப்புள்ள, சென்னை, பையனுார் பங்களாவை முடக்கினர். இதுவரை, 2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கி உள்ளனர்.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X