இந்தியா

காலாப்பட்டு சிறையில் 'மகா உத்சவ்' விழா கவர்னர் தமிழிசை பங்கேற்பு

Added : அக் 10, 2021
Share
Advertisement
புதுச்சேரி : காலாப்பட்டு மத்திய சிறையில் நடைபெற்ற, 'மகா உத்சவ்' விழாவில், கவர்னர் தமிழசை பங்கேற்று., பார்வையாளர்களுக்கான நவீன அறையை திறந்து வைத்தார்.காலாப்பட்டு மத்திய சிறையில், 200க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் உள்ளனர். சிறையில் காந்தி ஜெயந்தி விழாவை மையப்படுத்தி, சிறை 'மகா உத்சவ்' விழா நேற்று நடந்தது.சிறைத்துறை ஐ.ஜி., ரவிதீப்சிங்சாகர் வரவேற்றார்.
 காலாப்பட்டு சிறையில் 'மகா உத்சவ்' விழா  கவர்னர் தமிழிசை பங்கேற்பு


புதுச்சேரி : காலாப்பட்டு மத்திய சிறையில் நடைபெற்ற, 'மகா உத்சவ்' விழாவில், கவர்னர் தமிழசை பங்கேற்று., பார்வையாளர்களுக்கான நவீன அறையை திறந்து வைத்தார்.

காலாப்பட்டு மத்திய சிறையில், 200க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் உள்ளனர். சிறையில் காந்தி ஜெயந்தி விழாவை மையப்படுத்தி, சிறை 'மகா உத்சவ்' விழா நேற்று நடந்தது.சிறைத்துறை ஐ.ஜி., ரவிதீப்சிங்சாகர் வரவேற்றார். கவர்னர் தமிழிசை சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். இந்திய அளவில் முதல் முறையாக, காலாப்பட்டு சிறையில் கண்ணாடி தடுப்பிற்கு இடையே, நேருக்கு நேர் பார்த்துக் கொண்டு, கைதிகளும், உறவினர்களும் போன் மூலம் பேசிக் கொள்ளும் பார்வையாளர் மையம் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த மையத்தை கவர்னர் தமிழிசை திறந்து வைத்தார்.தொடர்ந்து, புதிதாக கட்டப்பட்ட பெண்கள் சிறை வளாகம், சி.சி.டி.வி. கேமரா கட்டுப்பாட்டு அறை, நுாலகம் திறந்து வைக்கப்பட்டது.சிறை வாசிகள் தயாரித்த கைவினை பொருட்கள் மற்றும் உற்பத்தி பொருட்கள் கண்காட்சியை சிறப்பு விருந்தினர்கள் பார்வையிட்டனர்.தலைமைச் செயலர் அஸ்வனிகுமார், தலைமை நீதிபதி செல்வநாதன், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மோகன், அரபிந்தோ சொசைட்டி விஜய்பாய் உட்பட பலர் கலந்து கொண்டனர்.தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த நடன கலைஞர்களின் நடனம் மற்றும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடந்தன.நிகழ்ச்சியில் கைதிகளின் குடும்பத்தினர் அனுமதிக்கப்பட்டனர். தலைமை சிறை கண்காணிப்பாளர் குமார் நன்றி கூறினார். ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் பாஸ்கரன் செய்திருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X