பொது செய்தி

இந்தியா

கொரோனா தொற்று பரவலால் மன உளைச்சல் ; சுகாதாரத் துறை இயக்குனர் தகவல்

Added : அக் 10, 2021
Share
Advertisement
புதுச்சேரி : கொரோனா தொற்றுக்கு பிறகு மக்கள் அதிக அளவு மன உளைச்சல், மனப்பதட்டம் பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர் என சுகாதாரத் துறை இயக்குனர் ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:உலக சுகாதார நிறுவனத்தினால் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 10ம் தேதி உலக மனநல தினமாக அனுசரிக்கப்படுகிறது. ஒரு சமுதாயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில் மக்களின் மன


புதுச்சேரி : கொரோனா தொற்றுக்கு பிறகு மக்கள் அதிக அளவு மன உளைச்சல், மனப்பதட்டம் பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர் என சுகாதாரத் துறை இயக்குனர் ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:உலக சுகாதார நிறுவனத்தினால் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 10ம் தேதி உலக மனநல தினமாக அனுசரிக்கப்படுகிறது. ஒரு சமுதாயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில் மக்களின் மன நலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.தற்போது கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு பிறகு, மக்கள் அதிகளவு மன உளைச்சல், மனப்பதட்டம், துாக்கமின்மை போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

குழந்தைகள் அதிக நாட்கள் பள்ளிக்கு செல்லாமல் ஆன்லைனில் கல்வி கற்பதால் மன பதட்டம், அதிக எடை கூடுதல், நடத்தை பிரச்னைகள், மன அழுத்தம் போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். உடல் நலனை பேணிக்காப்பது போல் மன நலத்தையும் பாதுகாக்க வேண்டும்புதுச்சேரி மனநல தேசியத் திட்டம் சார்பாக, நாளை 11ம் தேதி காலை 9.30 மணி அளவில், மனநல விழிப்புணர்வு பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இப்பேரணி மேட்டுப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து புறப்பட்டு, கதிர்காமம் மருத்துவக் கல்லுாரியில் முடிவடைகிறது.செவிலியர் கல்லூரி மாணவர்களுக்கு மனநலம் மேம்பாடு குறித்த கருத்தரங்கு கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் நடக்கிறது.இந்தாண்டின் கருப்பொருளாக, சமநிலை அற்ற உலகில் மனநலம் காப்போம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X