குடியிருப்பு பகுதியில் சிறுத்தை?

Added : அக் 10, 2021
Share
Advertisement
காரைக்கால் : காரைக்காலில் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததாக பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் எஸ்.பி., ரகுநாயகம் தலைமையில் வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.காரைக்கால் காமராஜர் சாலையில் உள்ள அருண்சங்கர் நகர் பகுதியில் குடியிருப்பு வீடுகளை சுற்றி பல இடங்களில் கருவேல மரங்கள் அதிகம் உள்ளன .இந்நிலையில் கடந்த 7ம் தேதி மதியம், இந்த குடியிருப்பு

காரைக்கால் : காரைக்காலில் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததாக பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் எஸ்.பி., ரகுநாயகம் தலைமையில் வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

காரைக்கால் காமராஜர் சாலையில் உள்ள அருண்சங்கர் நகர் பகுதியில் குடியிருப்பு வீடுகளை சுற்றி பல இடங்களில் கருவேல மரங்கள் அதிகம் உள்ளன .இந்நிலையில் கடந்த 7ம் தேதி மதியம், இந்த குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் காணப்பட்டதாக அப்பகுதி மக்கள் தீயணைப்பு நிலையம் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.அதையொட்டி, நேற்று, தமிழகத்திலிருந்து வந்த வனத்துறை அதிகாரிகள், எஸ்.பி., ரகுநாயகம் தலைமையில் அருண்சங்கர் நகர் குடியிருப்பு பகுதி மற்றும் அருகில் உள்ள வயல்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர்.ஆனால், சிறுத்தை நடமாட்டத்தை உறுதிப்படுத் தும் வகையில் கால் தடங்கள் எதும் கண்டறியப்படவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X