பொது செய்தி

இந்தியா

சி.பி.ஐ., இயக்குனருக்கு மும்பை போலீஸ் 'சம்மன்'

Updated : அக் 10, 2021 | Added : அக் 10, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
மும்பை: தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்பு வழக்கை விசாரித்து வரும் மும்பை போலீசார், சி.பி.ஐ., இயக்குனர் சுபோத் குமார் ஜெய்ஸ்வால் நேரில் ஆஜராகக்கோரி, 'சம்மன்' அனுப்பி உள்ளது.மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கூட்டணி ஆட்சி அமைந்து உள்ளது. இங்கு உளவுத்துறை தலைவராக ஐ.பி.எஸ்., அதிகாரி ராஷ்மி சுக்லா பணியாற்றியபோது, ஆளும் கட்சி தலைவர்களின்

மும்பை: தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்பு வழக்கை விசாரித்து வரும் மும்பை போலீசார், சி.பி.ஐ., இயக்குனர் சுபோத் குமார் ஜெய்ஸ்வால் நேரில் ஆஜராகக்கோரி, 'சம்மன்' அனுப்பி உள்ளது.



latest tamil news


மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கூட்டணி ஆட்சி அமைந்து உள்ளது. இங்கு உளவுத்துறை தலைவராக ஐ.பி.எஸ்., அதிகாரி ராஷ்மி சுக்லா பணியாற்றியபோது, ஆளும் கட்சி தலைவர்களின் தொலைபேசி உரையாடல்களை முறைகேடாக பதிவு செய்து, அதை வேண்டுமென்றே கசியவிட்டதாக புகார்கள் எழுந்தன.


latest tamil news


இந்த சம்பவம் நடந்தபோது, மாநில போலீஸ் டி.ஜி.பி.,யாக சுபோத் குமார் ஜெய்ஸ்வால் இருந்தார். இவர் தற்போது சி.பி.ஐ., இயக்குனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இந்த தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்பு வழக்கை விசாரித்து வரும் மும்பை குற்றப்பிரிவு போலீசார், சி.பி.ஐ., இயக்குனர் சுபோத் குமாருக்கு நேற்று, 'சம்மன்' அனுப்பினர். வரும் 14ம் தேதி நேரில் ஆஜராகும்படி அதில் அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
10-அக்-202116:13:18 IST Report Abuse
r.sundaram போன் ஒட்டுகேட்பு என்பது சாமானிய மனிதனுக்கு தவறு என்றாலும், ஒரு அரசை திறம்பட நடத்துவதற்கு அது தேவைதான். இன்றய உலக சூழலில் இது அத்தியாவசியம் ஒரு அரசுக்கு. தற்போது கைபேசி இருப்பதால், அன்று நடந்த மாதிரி கடிதம் எழுதுவது எல்லாம் நின்றுபோய் விட்டது, என்னாலே கைபேசியிலேயே முடிந்து விடுகிறது. தீவிர வாதத்தை, கள்ள கடத்தலை, ஊடுருவலை, மிகப்பெரிய ஊழலை கண்டுபிடிக்க என்று எல்லா வகையிலும் ஒரு அரசுக்கு போன் ஒட்டுகேட்பு என்பது அவசியமே. ஆனால் எதிலும் ஒரு லக்ஷ்மன் ரேகா வேண்டும்.
Rate this:
Cancel
கௌடில்யன் - Chennai ,இந்தியா
10-அக்-202113:44:56 IST Report Abuse
கௌடில்யன் அனில் தேஷ்முக் உள்துறை அமைச்சராக சில மாதங்களுக்கு முன் இருந்தார் .. இப்போ தலை மறைவு ..பரம்வீர் போலீஸ் கமிஷனரா இருந்தவர் தேடப்படும் குற்றவாளி .. அவருக்கு சல்யூட் அடித்த கான்ஸ்டபிள் கைது செய்ய தேடுகிறார் .. நவாப் மாலிக் மைனாரிட்டி நலவாழ்வு அமைச்சர் ..அவர் மருமகன் போதை மருந்து கடத்தலில் ஆறு மாசத்துக்கு மேல் ஜெயிலில் இருந்து இப்போ ஜாமினில் ...ஒருத்தருக்கு ஒருத்தர் பழி வாங்க அலையறாங்க ..சரத் பவார் மருமகன் வீடுகளில் வருமான வரி துறை ரெய்டு ..பவார் மற்றும் உத்தவ் இந்த பூனையும் பாலை குடிக்குமா என்கிற மாதிரி இருக்காங்க ...
Rate this:
Cancel
Karthik - Dindigul,இந்தியா
10-அக்-202111:40:00 IST Report Abuse
Karthik //மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கூட்டணி ஆட்சி அமைந்து உள்ளது.// இந்த செய்தி மும்பை காவல் துறைக்கும் CBIக்கும். இதில் கட்சியைத் தேவையில்லாமல் எதற்கு நுழைக்க வேண்டும்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X