பொது செய்தி

இந்தியா

கைதிகளுக்கு தொழிற்பயிற்சி கவர்னர் தமிழிசை பாராட்டு

Added : அக் 10, 2021
Share
Advertisement
புதுச்சேரி, : 'காலாப்பட்டு மத்திய சிறையில் 24 மணி நேரமும் இயங்கும் மருத்துவ மனை அமைக்க விரைவான நடவடிக்கை எடுக்கப்படும்' என கவர்னர் தமிழிசை கூறினார்.காலாப்பட்டு மத்திய சிறையில் நடந்த மகா உத்சவ் விழாவில், கவர்னர் தமிழிசை பேசியதாவது;சூழ்நிலை காரணமாக சிலர் கைதி ஆகின்றனர். கண நேரத்தில் கட்டுப்படுத்த முடியாத கோபத்தினால் தவறு இழைத்து விடுகிறார்கள். யாரும் குற்றவாளியாக

புதுச்சேரி, : 'காலாப்பட்டு மத்திய சிறையில் 24 மணி நேரமும் இயங்கும் மருத்துவ மனை அமைக்க விரைவான நடவடிக்கை எடுக்கப்படும்' என கவர்னர் தமிழிசை கூறினார்.

காலாப்பட்டு மத்திய சிறையில் நடந்த மகா உத்சவ் விழாவில், கவர்னர் தமிழிசை பேசியதாவது;சூழ்நிலை காரணமாக சிலர் கைதி ஆகின்றனர். கண நேரத்தில் கட்டுப்படுத்த முடியாத கோபத்தினால் தவறு இழைத்து விடுகிறார்கள். யாரும் குற்றவாளியாக பிறப்பதில்லைஏதோ ஒரு சூழ்நிலையில் குற்றம் செய்ய அவர்கள் தள்ளப்படுகிறார்கள். அதற்கு அவர்கள் சார்ந்த சூழலும் சமூகமும் கூட காரணம்.சிறைவாசம் நம்மை புதுப்பித்துக் கொள்வதற்கு உதவ வேண்டும்.

காந்தி, தான் சிறையில் இருந்த காலத்தில் ஒரு நிமிடம் கூட வீணடித்தது கிடையாது. கைதிகள் நேரத்தை வீணடிக்காமல், சிறைத் துறை அதிகாரிகளின் உதவியோடு, விவசாயம், கைவினைகள் என பலவற்றை கற்றுக் கொள்வதில் மகிழ்ச்சி.சிறையில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய மருத்துவமனை அமைக்க கோப்பு அனுப்பி உள்ளதாக அறிகிறேன். அதன் அவசியம் கருதி விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும்.சிறைச்சாலை என்பது மனதிற்கு கனமான ஒன்று. அதை சுவையான அனுபவமாக மாற்றி, விடுதலை அடைந்த பிறகு, நம் கையிலும் ஒரு தொழில் இருக்கிறது என்ற நம்பிக்கையை இச்சிறைச்சாலை ஏற்படுத்தி தருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X