நிதி இல்லாததால் பாதியில் நிற்கும் வாய்க்கால் பணி| Dinamalar

நிதி இல்லாததால் பாதியில் நிற்கும் வாய்க்கால் பணி

Added : அக் 10, 2021
Share
புதுச்சேரி : புதுச்சேரியில் சிறிய ஒப்பந்த பணிக்கு கூடநிதி வழங்க முடியாமல், பொதுப்பணித்துறை திணறி வருவதால், நுாறடிச் சாலை ரயில்வே மேம்பாலம் பகுதியில் சர்வீஸ் சாலை வாய்க்கால் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.புதுச்சேரி நுாறடிச்சாலை ரயில் மேம்பாலம் கடந்த 2018ம் ஆண்டு கட்டி திறக்கப்பட்டது. மேம்பாலத்தின் இரு புறத்திலும் சர்வீஸ் சாலை செல்கிறது.ரயில் பாதையில் இருந்து
 நிதி இல்லாததால் பாதியில் நிற்கும் வாய்க்கால் பணி


புதுச்சேரி : புதுச்சேரியில் சிறிய ஒப்பந்த பணிக்கு கூடநிதி வழங்க முடியாமல், பொதுப்பணித்துறை திணறி வருவதால், நுாறடிச் சாலை ரயில்வே மேம்பாலம் பகுதியில் சர்வீஸ் சாலை வாய்க்கால் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.

புதுச்சேரி நுாறடிச்சாலை ரயில் மேம்பாலம் கடந்த 2018ம் ஆண்டு கட்டி திறக்கப்பட்டது. மேம்பாலத்தின் இரு புறத்திலும் சர்வீஸ் சாலை செல்கிறது.ரயில் பாதையில் இருந்து காமாட்சி ஓட்டல் நோக்கி செல்லும் மேற்கு புற சர்வீஸ் சாலை வழியாக, ஜான்சி நகர், ராகவேந்திரா நகர், வள்ளலார் நகர், வாசன் நகர், ஐஸ்வரியம் நகர் பகுதிக்கு செல்ல வேண்டும்.இந்த சர்வீஸ் சாலையில், பள்ள வாய்க்காலின் கிளை வாய்க்கால் ஒன்று கடந்து செல்கிறது. இதற்காக., ரூ.15 லட்சம் செலவில், மூடிய 'ப' வடிவ வாய்க்கால் கட்டும் பணி கடந்து ஆண்டு துவங்கியது.சாலையில் பள்ளம் தோண்டி, கடந்த 3 மாதத்திற்கு முன்பு வாய்க்கால் பணி 50 சதவீதம் முடிந்த நிலையில் திடீரென நிறுத்தப்பட்டது.இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியான பின்பு, மீண்டும் கட்டுமான பணி துவங்கியது. கட்டுமான பணியை மேற்கொண்டுள்ள ஒப்பந்ததாரருக்கு பொதுப்பணி துறை பணம் பட்டுவாடா செய்யாததால் பணி நிறுத் தப்பட்டுள்ளது.

அதனால், வாய்க்கால் அமைக்க தோண்டிய பள்ளத்தை, தினமும் ஆபத்தான முறையில் வாகனங்கள் கடந்து செல்கின்றன. சர்க்கஸில் மரண கிணற்றில் வாகனம் ஓட்டுவது போல், கார்களை ஓட்டிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'ஒப்பந்ததாரருக்கு கொடுக்க வேண்டிய ரூ. 15 லட்சம் தொகையில், ரூ. 7 லட்சம் வழங்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், ஒப்பந்ததாரருக்கு பணம் வழங்கப்படவில்லை. இதனால் கட்டுமான பணி நிறுத்தப்பட்டது தெரிய வந்துள்ளது. ஒப்பந்ததாரருக்கு பணம் பட்டுவாடா செய்த பின் பணி துவக்கப்படும்' என தெரிவித்தனர்.சிறிய ஒப்பந்த பணிக்கு கூட நிதி கொடுக்க முடியாமல், பொதுப்பணித் துறை திணறி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X