வழிப்பறியில் ஈடுபட ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த ரவுடி கும்பல் கைது | Dinamalar

வழிப்பறியில் ஈடுபட ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த ரவுடி கும்பல் கைது

Added : அக் 10, 2021
Share
வில்லியனுார் : வில்லியனுார் அருகே, தீபாவளி செலவிற்காக வழிப்பறியில் ஈடுபட ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த ரவுடி கும்பலை போலீசார் பிடித்து, சிறையில் அடைத்தனர்.வில்லியனுார் அருகே கடந்த சில தினங்களுக்கு முன், உள்ளாட்சி தேர்தல் பணி முடிந்து, நள்ளி ரவில் கணவருடன் வீடு திரும்பிய அரசு பள்ளி ஆசிரியை மீது வழிப்பறி கும்பல் தாக்குதல் நடத்தியது.அதனை தொடர்ந்து இரவு ரோந்து பணியை

வில்லியனுார் : வில்லியனுார் அருகே, தீபாவளி செலவிற்காக வழிப்பறியில் ஈடுபட ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த ரவுடி கும்பலை போலீசார் பிடித்து, சிறையில் அடைத்தனர்.

வில்லியனுார் அருகே கடந்த சில தினங்களுக்கு முன், உள்ளாட்சி தேர்தல் பணி முடிந்து, நள்ளி ரவில் கணவருடன் வீடு திரும்பிய அரசு பள்ளி ஆசிரியை மீது வழிப்பறி கும்பல் தாக்குதல் நடத்தியது.அதனை தொடர்ந்து இரவு ரோந்து பணியை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். நேற்று முன்தினம் நள்ளிரவு 1:30 மணியளவில் வில்லியனுார் சப் இன்ஸ்பெக்டர் ராஜன் தலைமையில் போலீசார், பத்துக்கண்ணு உள்ளிட்ட பகுதியில் ரோந்து சென்றனர்.ஊசுட்டேரி படகு குழாம் அருகே மர்ம நபர்கள் போலீசாரின் வாகனத்தை கண்டு ஓடி பதுங்கினர்.

போலீசார், அக்கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களை பரிசோதித்ததில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்திருப்பது தெரிய வந்தது.விசாரணையில், திருக்கனுார் அருகே உள்ள தமிழக பகுதியான கொடாத்துார் அரவிந்தன்(எ)அஜித் (25), முரளி (23), முட்ராம்பட்டு இளஞ்செழியன் (21), துத்திப்பட்டு பிலோமின்தாஸ் (20), ராமநாதபுரம் சுபாஷ் சந்திரபோஸ் (19) என தெரிந்தது.தீபாவளி பண்டிகை செலவிற்காக வழிப்பறியில் ஈடுபட பதுங்கி இருந்ததை ஒப்புக் கொண்டனர். ஐந்து பேர் மீதும் வழக்கு பதிந்து கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.இதில், சுபாஷ்சந்திர போசை தவிர, மற்ற அனைவர் மீதும் கொலை, வெடிகுண்டு வழக்கு உட்பட பல வழக்குகள் உள்ளன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X