பொது செய்தி

இந்தியா

வஜ்ரங்கி அலங்காரத்தில் பெருமாள்

Added : அக் 10, 2021
Share
Advertisement
காரைக்கால் : ரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி 4வது சனிக்கிழமையை முன்னிட்டு நேற்று சுவாமி வஜ்ரங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.காரைக்கால் பாரதியார் சாலையில் நித்ய கல்யாண பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நேற்று புரட்டாசி 4வது சனிக்கிழமையை முன்னிட்டு, மூலவர் ரங்கநாதர் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை
வஜ்ரங்கி அலங்காரத்தில் பெருமாள்

காரைக்கால் : ரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி 4வது சனிக்கிழமையை முன்னிட்டு நேற்று சுவாமி வஜ்ரங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

காரைக்கால் பாரதியார் சாலையில் நித்ய கல்யாண பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நேற்று புரட்டாசி 4வது சனிக்கிழமையை முன்னிட்டு, மூலவர் ரங்கநாதர் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடத்தப்பட்டது.மூலவர் மற்றும் உற்சவர் நித்ய கல்யாண பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வஜ்ரங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை கோவில் அறங்காவல் குழுவினர் மற்றும் நித்ய கல்யாண பக்தஜன சபாவினர் செய்தனர்.இதேபோல, மாவட்டத்தில் உள்ள பல்வேறு பெருமாள் கோவில்களில் புரட்டாசி நான்காம் சனிக்கிழமையை யொட்டி பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X