லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம்

Added : அக் 10, 2021
Share
Advertisement
புதுச்சேரி : லஞ்ச ஒழிப்பு வாரத்தை யொட்டி, புதுச்சேரி அரசின் அனைத்து துறைகளிலும் வரும் 26ம் தேதி லஞ்ச ஒழிப்பு நேர்மைக்கான உறுதிமொழி ஏற்க உத்தரவிடப் பட்டுள்ளது.அக்., 26ம் தேதி முதல் நவ., 1ம் தேதி வரை லஞ்ச ஒழிப்பு வாரம் கடைபிடிக்கப்பட உள்ளது. இதையொட்டி, மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம், மாநிலங்களில் பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில்,

புதுச்சேரி : லஞ்ச ஒழிப்பு வாரத்தை யொட்டி, புதுச்சேரி அரசின் அனைத்து துறைகளிலும் வரும் 26ம் தேதி லஞ்ச ஒழிப்பு நேர்மைக்கான உறுதிமொழி ஏற்க உத்தரவிடப் பட்டுள்ளது.

அக்., 26ம் தேதி முதல் நவ., 1ம் தேதி வரை லஞ்ச ஒழிப்பு வாரம் கடைபிடிக்கப்பட உள்ளது. இதையொட்டி, மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம், மாநிலங்களில் பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில், புதுச்சேரி அரசு துறைகளில் வரும் 26ம் தேதி காலை 11.௦௦ மணிக்கு லஞ்ச ஒழிப்பு நேர்மைக்கான உறுதிமொழி ஏற்க உத்தரவிடப்பட்டு உள்ளது.இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை சார்பு செயலர் கண்ணன் அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.லஞ்ச ஒழிப்பு வார கூட்டத்தில், அதிகாரிகள் முன்னிலையில், பொது மக்கள் பங்கேற்கும் வகையில் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

அதில் மக்கள் பல்வேறு குறைகளை தெரிவித்தனர். பல்வேறு முறைகேடுகளும் வெளிச்சத்திற்கு வந்தது. அதையடுத்து, கடந்த சில ஆண்டுகளாக லஞ்ச ஒழிப்பு வார நிகழ்ச்சியை பொது அரங்கில் நடத்துவதை தவிர்த்தனர்.இந்தாண்டாவது லஞ்ச ஒழிப்பு வாரத்தையொட்டி குறை கேட்பு கூட்டம் நடத்த வேண்டும் என அரசியல் கட்சியினர், அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X