சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

முப்பரிமாண நெசவு இயந்திரம்!

Added : அக் 10, 2021
Share
Advertisement
ஜவுளித் துறையில் முப்பரிமாண அச்சியந்திரங்கள் பல புதுமைகளை நிகழ்த்தத் தொடங்கியுள்ளன. குறிப்பாக புதிய மூலப்பொருட்களைப் பயன்படுத்தி நெய்வதில் அதிரடிப் புரட்சி நடக்கிறது. அமெரிக்காவின் பிரபல எம்.ஐ.டி நிலையத்தில் விஞ்ஞானிகள் 'டிபெக்ஸ்டைல்ஸ்' என்ற துணி வகையை முப்பரிமான அச்சியந்திரத்தில் நெய்து சாதனை படைத்துள்ளனர்.மக்காச்சோளத்தில் தயாரிக்கப்படும் மட்கும் வகை
முப்பரிமாண நெசவு இயந்திரம்!

ஜவுளித் துறையில் முப்பரிமாண அச்சியந்திரங்கள் பல புதுமைகளை நிகழ்த்தத் தொடங்கியுள்ளன. குறிப்பாக புதிய மூலப்பொருட்களைப் பயன்படுத்தி நெய்வதில் அதிரடிப் புரட்சி நடக்கிறது. அமெரிக்காவின் பிரபல எம்.ஐ.டி நிலையத்தில் விஞ்ஞானிகள் 'டிபெக்ஸ்டைல்ஸ்' என்ற துணி வகையை முப்பரிமான அச்சியந்திரத்தில் நெய்து சாதனை படைத்துள்ளனர்.

மக்காச்சோளத்தில் தயாரிக்கப்படும் மட்கும் வகை பிளாஸ்டிக்கைக் கொண்டு நுண் வலைத் துணியை அவர்கள் அச்சிட்டுள்ளனர். ஒரே நேரத்தில் 70 மீட்டர் நீள டிபெக்ஸ்டைல் துணியை அச்சிட முடியும். உறுதியாகவும், சற்றே இழுவைத் தன்மையும் கொண்ட டிபெக்ஸ்டைல் துணி, 0.4 மில்லிமீட்டர் மொத்தமே உள்ளது.

இதை தேவையான அளவு அச்சிட்டு எடுப்பதன் மூலம பேஷன் வடிவமைப்பாளர்கள் விரயத்தை தவிர்க்கலாம்.மேலும் தனி நபர்களின் உடல் அளத்திக்குத் தேவையான அளவு மட்டும் டெபெக்ஸ்டைல் துணியை சிக்கனமாக அச்சிட்டு எடுத்துத் தைக்க முடியும்.

வலை போன்ற இத் துணியில், இடைவெளியை பல வடிவங்களில் அதிகரித்து 'லேஸ்' துணி போலவும், வேறு சில வகை துணிகள் போலவும் முப்பரிமாண அச்சியந்திரத்தில் தயாரிக்க முடியும் என எம்.ஐ.டி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மருத்துவத் துறையில் இத்தகைய துணிகளுக்கு பலவகை பயன்கள் இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X