சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

மின் குப்பைக்கு 'ஷாக் ட்ரீட்மென்ட்'!

Added : அக் 10, 2021
Share
Advertisement
மின் கழிவுகள் நேரே குப்பை மேட்டுக்குப் போனால், சுற்றுச்சூழல் சீரழியும். மண் வளம் பாழாகும்.அதுவே செம்மையான மறுசுழற்சிக்குப் போனால், குப்பையும் செல்வமாகும். அதற்கு உதவும் ஒரு அதிரடி முறையைத்தான் அமெரிக்காவிலுள்ள ரைஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.மொபைல் போன்கள் முதல் மடிக் கணினி வரை இடம்பிடித்திருக்கும் சர்கியூட் போர்டுகளை தவிடு பொடியாக்கி, சில
மின் குப்பைக்கு 'ஷாக் ட்ரீட்மென்ட்'!

மின் கழிவுகள் நேரே குப்பை மேட்டுக்குப் போனால், சுற்றுச்சூழல் சீரழியும். மண் வளம் பாழாகும்.அதுவே செம்மையான மறுசுழற்சிக்குப் போனால், குப்பையும் செல்வமாகும். அதற்கு உதவும் ஒரு அதிரடி முறையைத்தான் அமெரிக்காவிலுள்ள ரைஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

மொபைல் போன்கள் முதல் மடிக் கணினி வரை இடம்பிடித்திருக்கும் சர்கியூட் போர்டுகளை தவிடு பொடியாக்கி, சில மில்லி செகண்டுகளுக்கு மட்டும் சில 3127 டிகிரி சென்டிகிரேடு வெப்பத்தை உண்டாக்கினால் போதும்.

அந்த சர்கியூட்டுகளில் இருந்த தங்கம், செம்பு, வெள்ளி, ரோடியம், பலேடியம் என்று பலவகை அரிய உலோகங்கள் உருகி ஆவியாகும். அந்த ஆவியை குளிர்ந்த கலனுக்குள் செலுத்தினால் அவை கட்டியாகிவிடும்.

பிறகு, வழக்கம்போல உலோகங்களை பிரித்தெடுக்கும் மின்வேதியல் முறைகளைப் பயன்படுத்தினால் போதும்.'பிளாஷ் ஜூல் வெப்ப முறை' எனப்படும் இந்த முறையில் மின்சாரம் மிகக்குறைவாக பயன்படுவதால், சிக்கனமான மறுசுழற்சி முறை இது என ரைஸ் பல்கலை விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்.

கடந்த 2019ல் மட்டும் 58 மில்லியன் டன்களுக்கு மின் குப்பைகள் கொட்டப்பட்டன. இதில் வெறும் 20 சதவீதம் மட்டுமே மறுசுழற்சிக்குச் சென்றன. எனவே இதுபோன்ற புதிய, சிக்கனமான, விரைவான மறுசுழற்சி முறைகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்பதில் ஐயமில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X