மீண்டும் ஒரு மின்வெட்டுக் காலகட்டத்தை தமிழகம் தாங்காது: கமல்

Updated : அக் 10, 2021 | Added : அக் 10, 2021 | கருத்துகள் (33)
Advertisement
சென்னை: ‛‛மீண்டும் ஒரு மின்வெட்டுக் காலகட்டம் என்றால் தமிழகம் தாங்காது,'' என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது: தமிழகத்தின் தினசரி மின்தேவை 14,000 மெகாவாட் வரை உயரும். தமிழகத்தில் உள்ள அனல்மின் நிலையங்கள் மூலமாக தினமும் 4,320 மெகாவாட் வரை மின்உற்பத்தியாகிறது.அனல் மின் நிலையங்கள்
மீண்டும் மின்வெட்டு, தமிழகம் தாங்காது, நடவடிக்கை தேவை, மநீம கோரிக்கை, கமல்,

சென்னை: ‛‛மீண்டும் ஒரு மின்வெட்டுக் காலகட்டம் என்றால் தமிழகம் தாங்காது,'' என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது: தமிழகத்தின் தினசரி மின்தேவை 14,000 மெகாவாட் வரை உயரும். தமிழகத்தில் உள்ள அனல்மின் நிலையங்கள் மூலமாக தினமும் 4,320 மெகாவாட் வரை மின்உற்பத்தியாகிறது.


latest tamil news


அனல் மின் நிலையங்கள் தடையின்றி இயங்க நிலக்கரி அவசியம். அனல்மின் நிலையங்களில் 14 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி இருப்பு வைத்திருப்பது வழக்கம். ஆனால், தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் கட்டுப்பாட்டில் வரும் வடசென்னை, துாத்துக்குடி, மேட்டூர் அனல் மின் நிலையங்களில் வெறும் 4 நாட்களுக்கு தேவையான நிலக்கரியே உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு தமிழகத்தில் மின்வெட்டு சூழல் உருவாகலாம் என்ற அச்சம் அனைத்து தரப்பினரையும் சூழ்ந்துள்ளது.

கடந்த 2006-2011 தி.மு.க., ஆட்சிக்காலத்தில் நிலவிய கடுமையான மின்வெட்டால் தமிழகத்தில் விவசாயம், தொழிற்துறை, மருத்துவசேவை கடுமையாக பாதித்தது. கோவை, திருப்பூர், கரூர், சிவகாசி தொழில்நகரங்களில் பொருளாதார சிதைவு ஏற்பட்டது. பல தொழில் நிறுவனங்கள், வேறு மாநிலங்களுக்கு தங்கள் தொழிலை மாற்றிக் கொண்டன. மீண்டும் அப்படி ஒரு சூழல் ஏற்படக்கூடாது.


latest tamil news


பொருளாதார மந்தநிலை, கொரோனா,பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பண்டிகை விற்பனைக்கு வியாபாரிகள் தயாராகி வருகின்றனர். மருத்துவமனை, விவசாயிகளுக்கு தடையற்ற மின்சாரம் தேவை. இச்சூழலில் மீண்டும் ஒரு மின்வெட்டுக் காலக்கட்டம் ஏற்பட்டால் தமிழகம் நிச்சயம் தாங்காது.

தமிழக அரசு தேவையான நிலக்கரியை மத்திய அரசிடம் கேட்டுப்பெற விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசும் நிலக்கரி இறக்குமதியை அதிகரித்து அனல்மின் நிலையங்களுக்கு தங்குதடையின்றி நிலக்கரி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raju - jersi,யூ.எஸ்.ஏ
11-அக்-202100:57:25 IST Report Abuse
Raju மின்சாரம் தேவை இல்லை. சம்சாரம் கோவில் கோவிலாக சென்று பதவியை காப்பாத்துவார்
Rate this:
Cancel
srinivasan - stockholm,சுவீடன்
11-அக்-202100:37:38 IST Report Abuse
srinivasan Hassan Bai oru thadavai sonna 101 thadavai sonna mathiri
Rate this:
Cancel
Barakat Ali - Medan,இந்தோனேசியா
10-அக்-202121:53:36 IST Report Abuse
Barakat Ali ஆண்டவரே டீம்காவுக்கு அட்வைஸ் பண்ணுற அளவுக்கு நீங்க வளர்ந்துட்டதா நீங்களே நம்பறீங்களா ? பார்த்து வீட்டுக்கு ஆட்டோ வந்துடப் போகுது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X