காஷ்மீரில் 16 இடங்களில் என்.ஐ.ஏ., ரெய்டு

Updated : அக் 10, 2021 | Added : அக் 10, 2021 | கருத்துகள் (8) | |
Advertisement
ஸ்ரீநகர்: காஷ்மீரில் 16 இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.இந்தியாவிற்கு எதிராக தாக்குதல் நடத்துவதற்கு நடத்துவதற்கு, ஐ.எஸ்., பயங்கரவாதிகள் ஆட்கள் தேர்வு செய்தது தொடர்பாக கடந்த ஜூன் 29ல் என்.ஐ.ஏ., அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக ஜூலை 11ல் சோதனை நடத்தி 3 பேரை கைது செய்தனர். அதேபோல், கடந்த ஜூன் மாதம் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகளிடம் இருந்து 5
காஷ்மீர், என்ஐஏ, kashmir, NIA, raid

ஸ்ரீநகர்: காஷ்மீரில் 16 இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்தியாவிற்கு எதிராக தாக்குதல் நடத்துவதற்கு நடத்துவதற்கு, ஐ.எஸ்., பயங்கரவாதிகள் ஆட்கள் தேர்வு செய்தது தொடர்பாக கடந்த ஜூன் 29ல் என்.ஐ.ஏ., அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக ஜூலை 11ல் சோதனை நடத்தி 3 பேரை கைது செய்தனர். அதேபோல், கடந்த ஜூன் மாதம் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகளிடம் இருந்து 5 கிலோ ஐ.இ.டி வெடிபொருள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக மற்றொரு வழக்குப்பதிவு செய்து, கடந்த மாதம் பல இடங்களில் சோதனை நடத்தினர்.
இதில் நடந்த விசாரணையில், சம்பவத்தில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் தொடர்பு இருப்பது தெரியவந்தது.


latest tamil news


இந்நிலையில், இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பாக காஷ்மீரில் ஸ்ரீநகர், ஆனந்த்நாக், குல்காம் உள்ளிட்ட 16 இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். சி.ஆர்.பி.எப்., வீரர்கள் மற்றும் காஷ்மீர் போலீசார் உதவியுடன் இந்த சோதனை நடந்தது.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
elakkumanan - Naifaru,மாலத்தீவு
10-அக்-202123:05:35 IST Report Abuse
elakkumanan சிறுபான்மை இனத்தின் மீது அடக்குமுறை ............மோடி மற்றும் அமித் ஷா ஒயிக...........காஸ்மீர் மக்களின் உணர்வுகளை இந்த அரசு மதிக்காமல் மிதிக்கிறது ............இந்தியாவிற்கு எதிராக யார் எங்கு என்ன பேசினாலும் செய்தாலும் எங்க ஊர் இருட்டு கட்சியினரின் பெயரில்லா இருநூறு ரூவாய் கும்பல் ஆதரிக்கும்..............இரும்புக்கரம் கொண்டு அடக்குங்கள்... பொடா போன்ற கடுமையான சட்டங்கள் மிகவும் அவசியம்.....டுமீல் பட்டியில் தெருவுக்கு ரெண்டு பெரு புரட்சி பண்ண கெளம்பீட்டானுவோ.......கடும் கண்காணிப்பும் கடும் சட்டங்களும் உடனடி தேவை.....நடந்தபின்பு, விசாரணை என்பது பயனற்றது......இது போன்ற தேச நலன் மற்றும் தீவிரவாத போதை மருந்து தடுப்பு போன்றவற்றில் வருமுன் காப்பதே எளிது...............நல்ல பலன் தரக்கூடியது...............
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
10-அக்-202122:25:40 IST Report Abuse
தமிழ்வேள் தமிழகத்தை சல்லடை போட்டு சலித்தெடுத்தால் ,இந்தியாவின் அனைத்துப்பகுதி தீவிரவாதத்துக்கும் காரணம் மற்றும் பண உதவி டூல்கிட் உதவி பற்றிய ரகசியங்கள் வெளியாகும் ...தமிழகம் தீவிரவாத தேசத்துரோக ஊற்றுக்கண் ஆகி வெகுகாலமாகிறது ..முதல் சோதனையை திமுக , அதன் கூட்டணி ,கிறிஸ்தவ இஸ்லாமிய அமைப்புகளிலிருந்து துவங்கவேண்டும் ....
Rate this:
Cancel
அ.வேல்முருகன் - Salem,இந்தியா
10-அக்-202120:51:15 IST Report Abuse
அ.வேல்முருகன் தீவிரவாதம் என்ற பெயரில் மனித தன்மை மறந்த கூட்டம் மனித உயிர்களை பறித்து குடும்பங்கள் பல ஆதரவின்றி தவிப்பது மட்டும் அல்ல பல சமூக சிக்கல்களுக்கு அடிப்படையாகும் கொடுமை. நாட்டின் புலனாய்வு அமைப்புகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன,பொதுமக்கள் தங்களுக்கு கிடைக்கின்ற தகவல்களை உடனுக்குடன் காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X