சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : அக் 10, 2021
Share
Advertisement
அறிவியல் ஆயிரம்கால் இல்லா உயிரினம்நத்தையில் பல இனங்கள் உள்ளன. இவை நிலம், குளம், குட்டை, ஆறு, கடல் போன்ற இடங்களில் வாழ்கின்றன. எலும்புகள் இல்லாத உயிரினங்களுள் இதுவும் ஒன்று. இவற்றுக்குக் கால்கள் இல்லை. அதன் அடிப்பாகம் முழுவதும் தட்டையான பாதம் போல செயல்படும். வயிற்றுப்பகுதியை உந்தித் தள்ளி ஊர்ந்து செல்லும். இதற்கு அவற்றிடம் உள்ள வழவழப்பான பிசின் உதவுகிறது. மிக

அறிவியல் ஆயிரம்
கால் இல்லா உயிரினம்

நத்தையில் பல இனங்கள் உள்ளன. இவை நிலம், குளம், குட்டை, ஆறு, கடல் போன்ற இடங்களில் வாழ்கின்றன. எலும்புகள் இல்லாத உயிரினங்களுள் இதுவும் ஒன்று. இவற்றுக்குக் கால்கள் இல்லை. அதன் அடிப்பாகம் முழுவதும் தட்டையான பாதம் போல செயல்படும். வயிற்றுப்பகுதியை உந்தித் தள்ளி ஊர்ந்து செல்லும். இதற்கு அவற்றிடம் உள்ள வழவழப்பான பிசின் உதவுகிறது. மிக மெதுவாகச் செல்லும் நத்தைகள், சராசரியாக வினாடிக்கு ஒரு மில்லி மீட்டர் வேகத்தில் நகரும். இது தன் உடல் எடையைவிட, பத்து மடங்கு எடை வரையிலான பொருட்களைத் துாக்கிச் செல்லும்.
தகவல் சுரங்கம்
பெண் குழந்தைகள் தினம்

பெண்கள் இன்று பல்வேறு துறைகளிலும் சாதனை படைக்கின்றனர். பெண் குழந்தைகள் மீதான குற்றங் களை தடுத்தல், உரிமைகளை காத்தல் மற்றும் சாதனைகளை அங்கீகரிக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் அக். 11ல் சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. 'எனது குரல், நமது சமமான எதிர்காலம்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. பெண் குழந்தைகள் கல்வி கற்பதன் மூலம் இந்த சமூகம் முன்னேறும். இன்றும் சில நாடுகளில் பெண்களுக்கு கல்வி உரிமை மறுக்கப்படுகிறது. பெண் குழந்தை களுக்கு எதிரான குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X