சர்வாதிகாரியா மோடி? அமித்ஷா பதில்!

Updated : அக் 10, 2021 | Added : அக் 10, 2021 | கருத்துகள் (22)
Share
Advertisement
புது டில்லி: மத்திய அரசு கடந்த மாதம் தொடங்கிய சன்சாத் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி மீது வைக்கப்படும் சர்வாதிகாரி என்ற கருத்துக்கு பதிலளித்தார். அந்த பேட்டியில் அமித்ஷா கூறியதாவது: எங்களை சர்வாதிகாரி என சிலர் குற்றம்சாட்டுவது நியாயமற்றவை. மோடி போன்று கருத்துக்களுக்கு காது கொடுப்பவரை நான் பார்த்ததில்லை. ஏதேனும்

புது டில்லி: மத்திய அரசு கடந்த மாதம் தொடங்கிய சன்சாத் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி மீது வைக்கப்படும் சர்வாதிகாரி என்ற கருத்துக்கு பதிலளித்தார்.



latest tamil news




அந்த பேட்டியில் அமித்ஷா கூறியதாவது: எங்களை சர்வாதிகாரி என சிலர் குற்றம்சாட்டுவது நியாயமற்றவை. மோடி போன்று கருத்துக்களுக்கு காது கொடுப்பவரை நான் பார்த்ததில்லை. ஏதேனும் பிரச்சனைக்கான கூட்டம் நடந்தால் மோடி குறைவாகப் பேசுவார். பொறுமையாக அனைவர் பேசுவதையும் கேட்டு முடிவெடுப்பார். ஒரு விஷயத்தில் இவ்வளவு யோசிக்க என்ன இருக்கிறது என்று நாங்கள் அடிக்கடி நினைப்போம். ஆனால் அவர் இரண்டு, மூன்று கூட்டங்களுக்குப் பிறகே பொறுமையாக ஒரு முடிவை எடுப்பார்.


ஒரு நபரின் பரிந்துரை தரமானதா என்று தான் மோடி முக்கியத்துவம் தருகிறார். அந்த நபர் யார் என்பதை அடிப்படையாகக் கொண்டு முக்கியத்துவம் தரமாட்டார். எனவே, அவர் பிரதமராக தனது முடிவுகளை திணிக்கிறார் என்று சொல்வது உண்மையில்லை. அவருடன் வேலை செய்த எதிர்க்கட்சியினர் கூட அமைச்சரவை இதுபோன்ற ஜனநாயக முறையில் முன் எப்போதும் செயல்பட்டதில்லை என்பதை ஒப்புக்கொள்வார்கள். என்றார்.


latest tamil news





ஆண்டுக்கு ரூ.6,000!


விவசாய சட்டங்கள் பற்றி பேசியவர், “விவசாயிகளுக்கு உதவ பாஜக அரசு பெரும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 11 கோடி விவசாயிகள் ஆண்டுக்கு ரூ.6,000 பெறுகின்றனர். ஓராண்டுக்குள் ரூ.1.5 லட்சம் கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. நேரடியாக அது விவசாயிகளுக்கு செல்கிறது. மேலும் சராசரியாக விவசாயம் செய்ய 1.5 முதல் 2 ஏக்கர் நிலங்கள் உள்ளன. அதன் மூலம் அறுவடை பணம் வருகிறது. அதனால் விவசாயிகள் கடன் வாங்கவில்லை.” என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
11-அக்-202102:41:36 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் மோடி இட்லரான்னு கோயபல்ஸ் அமீத் சா கேக்குறார்.
Rate this:
Cancel
10-அக்-202123:02:49 IST Report Abuse
Saai Sundharamurthy A.V.K வேளாண் சட்டங்களுக்காக காங்கிரஸ் கொலைகார்களும், தீவிரவாதிகளும் சேர்ந்து நடத்தும் போராட்டத்திற்கு ஒரு வருட காலமாக மோடிஜி அனுமதி கொடுத்திருக்கிறார் என்றால் அது ஜனநாயக பண்பு இல்லையா ??? இதை தான் எதிர்க்கட்சிகள் சர்வாதிகாரம் என்று கூற வருகிறார்களா ?????இதே காங்கிரஸ் ஆட்சி இருந்திருந்தால் இப்படி நீண்ட காலத்திற்கு போராட்டம் நடந்திருக்குமா ????? இனியும் பாஜக அரசு பொறுத்துக் கொள்ள கூடாது. அந்த போராட்டத்தை ராணுவத்தை வைத்து துவம்சம் செய்து விட வேண்டும். எவ்வளவு பேர் சாகிறார்கள் என்பது முக்கியமல்ல. நாட்டின் வளர்ச்சிக்கு தடை போடுபவர்கள் செத்து தொலையட்டும். நாட்டுக்கு துரோகம் செய்யும் / கூக்குரலிடும் எதிர்க்கட்சி தலைவர்களை சிறையில் அடைத்து விட வேண்டும்.
Rate this:
Cancel
10-அக்-202122:47:28 IST Report Abuse
Saai Sundharamurthy A.V.K மோடிஜியை பற்றி யார் எது வேண்டுமானாலும் பேசட்டும். பிண அரசியல் செய்யட்டும். ஊடகங்கள் மோடிஜியை இருட்டடிப்பு செய்யட்டும். ஆனாலும், எங்களின் ஆதரவு மோடிஜிக்கு மட்டுமே.👍காங்கிரஸ் ஆண்டால் ஜனநாயகம், பாஜக ஆண்டால் சர்வதிகாரமா ???????மோடிஜி இல்லாமல் நாட்டை ஆள்வது என்பது பல்லில்லாதவன் பக்கோடா தின்பதற்கு சமம். மோடிஜி வாழ்க 👌👌👌பாஜக வாழ்க 👌👌👌ஜெய் ஹிந்த் 👌👌👌
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X