டில்லியில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி! : உளவுத்துறை எச்சரிக்கையால் போலீஸ் உஷார்

Updated : அக் 12, 2021 | Added : அக் 10, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி:டில்லியில் பண்டிகை காலத்தில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக, உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உஷார் அடைந்துள்ள போலீசார் அவசர ஆலோசனை நடத்தினர். சமூக விரோதிகள், போலீசாரின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டையின் ஒரு பகுதியாக, ஜம்மு - காஷ்மீரில் 16 இடங்களில் என்.ஐ.ஏ.,
டில்லி, தாக்குதல், நடத்த, பயங்கரவாதிகள்,சதி!

புதுடில்லி:டில்லியில் பண்டிகை காலத்தில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக, உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உஷார் அடைந்துள்ள போலீசார் அவசர ஆலோசனை நடத்தினர். சமூக விரோதிகள், போலீசாரின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டையின் ஒரு பகுதியாக, ஜம்மு - காஷ்மீரில் 16 இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, கடந்த மாதம் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,யைச் சேர்ந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து1.5கிலோ ஆர்.டி.எக்ஸ்., வெடி பொருட்களை கைப்பற்றினர்.டில்லியில் பண்டிகை காலத்தில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியிருப்பதாகவும், அதை செயல்படுத்தும் நோக்கில் இந்த இரண்டு பயங்கரவாதிகளும் டில்லி வந்ததாகவும் உளவுத் துறை தெரிவித்தது.


ஆலோசனை

இதையடுத்து, டில்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் போலீஸ் கமிஷனர் ராகேஷ் அஸ்தானா ஆலோசனை நடத்தினார். இதில், பயங்கரவாதிகளுக்கு உள்ளூர் கிரிமினல்கள் உதவுவதை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும், சமூக விரோதிகளை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வருவது குறித்தும் ஆலோசிக்கப் பட்டது.

இது குறித்து ராகேஷ் அஸ்தானா கூறியதாவது: டில்லியில் பண்டிகை காலத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. உள்ளூர் கிரிமினல்கள் உதவி இல்லாமல் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த முடியாது. தாக்குதல் நடத்துவதற்கு ரவுடிகள், சமூக விரோதிகள், குற்றச் சம்பவங்களில் தொடர்புடையவர்கள் உதவலாம். ரசாயன கடைகள், இன்டர்நெட் மையங்கள், பழைய பொருள் விற்பனையாளர்கள், கார் டீலர்கள், வாகன நிறுத்துமிடங்களை தொடர்ச்சியாக கண்காணிக்கும்படி போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

பெட்ரோல் பங்க்குகள் மற்றும் பெட்ரோல் டாங்கர்கள் குறி வைக்கப்படலாம் என்றும் தகவல் வந்துள்ளது. சமூக விரோதிகளை கண்காணித்து, அவர்களை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


5 கிலோ வெடி பறிமுதல்இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்கு, ஐ.எஸ்., பயங்கரவாதிகள் ஆட்கள் தேர்வு செய்வதாக வந்த தகவலின் அடிப்படையில், என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக கர்நாடக மாநிலம் பத்கலில் சோதனை நடத்தி, சமீபத்தில் ஜுப்ரி ஜவ்கர் தாமுடி என்பவரை கைது செய்தனர்.

அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஜம்மு - காஷ்மீரில் சோதனை நடத்தி, மூன்று பேரை கைது செய்தனர். இதற்கிடையில் ஜூனில் ஜம்மு நகரில் லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிகளிடம் இருந்து, 5 கிலோ வெடிப்பொருட்களை என்.ஐ.ஏ., அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக ஜம்மு - காஷ்மீரில் சமீபத்தில் பல இடங்களில் சோதனை நடத்தினர். இந்த சம்பவத்தில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.


முக்கிய ஆவணங்கள்

இந்நிலையில் இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பாக காஷ்மீரில் ஸ்ரீநகர், ஆனந்த்நாக், குல்காம் உள்ளிட்ட 16 இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று ஒரே நேரத்தில் அதிரடிச் சோதனை நடத்தினர். மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் மற்றும் காஷ்மீர் போலீசார் உதவியுடன் இந்த சோதனை நடந்தது. இதில், பல முக்கிய ஆவணங்களை என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைப்பற்றினர். சோதனை தொடர்கிறது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
11-அக்-202106:29:43 IST Report Abuse
Kasimani Baskaran இனி ஒரே வழி போதை வஸ்த்து வினியோகிக்கும் தறுதலைகளை மொத்தமாக அழிப்பதுதான். இல்லை என்றால் இளைஞர்களின் எதிர்காலமும் நாட்டின் எதிர்காலமும் நாசம்.
Rate this:
Cancel
Raman - kottambatti,இந்தியா
11-அக்-202106:03:25 IST Report Abuse
Raman மாதாமாதம் வருஷாவருஷம் இந்த கதையை சொல்ல மறந்துடாதீங்கடா எவன் என்று கண்டு பிடிக்க துப்பு இல்லை. எப்பப்பாரு இந்த தேஞ்ச ரெகார்டை சொல்லிகிட்டே இருப்பானுக. இதுக்கு இவனுங்களுக்கு சம்பளம் வேற
Rate this:
Cancel
Milirvan - AKL,நியூ சிலாந்து
11-அக்-202103:52:58 IST Report Abuse
Milirvan இதெல்லாம் சும்மா.. என்று காலிகள் கூறுவார்கள்.. ஏதாவது நடந்தால், ஏன் முன்பே ஏதும் செய்யவில்லை என்று கூப்பாடு போடுவார்கள்..ஈனப்பிறவிகள்.. இதைத்தான் ஒவ்வொரு தாக்குதலுக்கு முன்பும், பின்பும் பார்க்கிறோமே?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X