குழந்தை பெற தயங்கும் பெண்கள்: கர்நாடக அமைச்சர் சர்ச்சை பேச்சு

Updated : அக் 10, 2021 | Added : அக் 10, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
பெங்களூரு:''நாட்டில் இப்போதுள்ள நவீன பெண்கள் தனித்து வாழவே விரும்புகின்றனர். அப்படியே திருமணம் செய்தாலும், குழந்தை பெற்றுக் கொள்வதை அவர்கள் விரும்புவதில்லை,'' என, கர்நாடக மாநில சுகாதார அமைச்சர் டாக்டர் சுதாகர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கலாசாரத்தின் தாக்கம்கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. தலைநகர்

பெங்களூரு:''நாட்டில் இப்போதுள்ள நவீன பெண்கள் தனித்து வாழவே விரும்புகின்றனர். அப்படியே திருமணம் செய்தாலும், குழந்தை பெற்றுக் கொள்வதை அவர்கள் விரும்புவதில்லை,'' என, கர்நாடக மாநில சுகாதார அமைச்சர் டாக்டர் சுதாகர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.



latest tamil news




கலாசாரத்தின் தாக்கம்

கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. தலைநகர் பெங்களுரில் உள்ள தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்தில் உலக சுகாதார தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்ற, கர்நாடக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் சுதாகர் பேசியதாவது:

நாட்டில் இப்போதுள்ள நவீன காலத்துப் பெண்கள் தனித்து வாழவே விரும்புகின்றனர் என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கிறேன். திருமணம் செய்துக் கொண்டாலும், குழந்தை பெற்றுக் கொள்ள அவர்கள் விரும்புவதில்லை. வாடகை தாய் வாயிலாக குழந்தை பெற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். நம் சிந்தனையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது; இது நல்லதல்ல. மேற்கத்திய கலாசாரத்தின் தாக்கம் இந்திய மக்களிடம் அதிகரித்து வருகிறது. பெற்றோர் தங்களுடன் இருப்பதையே பலர் விரும்புவதில்லை. தாத்தா, பாட்டியிடம் பேரக்குழந்தைகள் வளர்வது மறந்து போன நிகழ்ச்சியாகிவிட்டது.


latest tamil news




அதிருப்தி



மன அழுத்தத்தை குறைக்க யோகா, பிராணயாமம், தியானம் என பல வழிகளை நம் முன்னோர்கள் நமக்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கற்றுத்தந்துஉள்ளனர். இந்தியாவில் மட்டுமே கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது. மற்ற நாடுகளில் 1,500 ரூபாய் முதல், 4 ஆயிரம ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.இவ்வாறு அவர் பேசினார். அமைச்சரின் இந்த பேச்சு, பெண்களிடையே கோபத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-அக்-202113:09:53 IST Report Abuse
Sathyanarayanan Sathyasekaren PLEASE DON'T REPEAT THE SAME COMMENT
Rate this:
Cancel
Krishnan G - Chennai,இந்தியா
11-அக்-202109:01:36 IST Report Abuse
Krishnan G உண்மையைத்தான் சொல்லியுள்ளார். உண்மையை உரக்க ஒலித்ததற்கு மனமார்ந்த வாழ்த்துக்களும் ஆதரவும்.. ஜெய் ஹிந்த்
Rate this:
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
11-அக்-202107:15:20 IST Report Abuse
அம்பி ஐயர் இதிலென்ன சர்ச்சை இருக்கிறது....??? அவர் முற்றிலும் சரியாகத் தானே சொல்லியிருக்கிறார்..... மூர்க்க மதப் பெண்களைப் பாருங்கள்..... குடும்பக் கட்டுப்பாடு ஹராம் என்பதால் அவ்வொரு பெண்ணும் குறைந்தது மூன்று முதல் ஐந்து குழந்தைகளைப் பெற்றுக்கொள்கின்றனர்..... ஆனால் நம் இந்துப் பெண்களோ குழந்தை பெற்றுக்கொள்வதையே விரும்புவதில்லை...... அப்படியே பெற்றுக்கொண்டாலும்.... ஒண்ணே ஒண்ணு.... கண்ணே கண்ணு தான்.... அமைச்சர் சரியாகத் தான் சொல்லியிருக்கிறார்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X