மின்வெட்டு வராது என மத்திய அமைச்சகம்...உத்தரவாதம்!:400 லட்சம் டன் நிலக்கரி கையிருப்பு உள்ளதாக தகவல்:தமிழகத்திலும் பாதிப்பு வராது என்கின்றனர் அதிகாரிகள்

Updated : அக் 12, 2021 | Added : அக் 10, 2021 | கருத்துகள் (4+ 10)
Share
Advertisement
புதுடில்லி:'மாநிலங்களில் நான்கு நாட்களுக்கு தேவையான 72 லட்சம் டன் நிலக்கரி கையிருப்பு உள்ளது. மேலும், 'கோல் இந்தியா' நிறுவனத்திடம், 400 லட்சம் டன் நிலக்கரி உள்ளது. அதனால் மின்வெட்டு வராது' என, மத்திய நிலக்கரி அமைச்சகம் உத்தரவாதம் அளித்துள்ளது. ''மின்வெட்டு ஏற்படும் என பீதியை கிளப்ப வேண்டாம்,'' என, மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே. சிங் எச்சரித்துள்ளார். இதற்கிடையே
மின்வெட்டு வராது என மத்திய அமைச்சகம்...உத்தரவாதம்!:400 லட்சம் டன் நிலக்கரி கையிருப்பு உள்ளதாக தகவல்:தமிழகத்திலும் பாதிப்பு வராது என்கின்றனர் அதிகாரிகள்

புதுடில்லி:'மாநிலங்களில் நான்கு நாட்களுக்கு தேவையான 72 லட்சம் டன் நிலக்கரி கையிருப்பு உள்ளது. மேலும், 'கோல் இந்தியா' நிறுவனத்திடம், 400 லட்சம் டன் நிலக்கரி உள்ளது. அதனால் மின்வெட்டு வராது' என, மத்திய நிலக்கரி அமைச்சகம் உத்தரவாதம் அளித்துள்ளது. ''மின்வெட்டு ஏற்படும் என பீதியை கிளப்ப வேண்டாம்,'' என, மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே. சிங் எச்சரித்துள்ளார். இதற்கிடையே தமிழகத்திலும் பாதிப்பு வராது என, அதிகாரிகள் கூறியுள்ளனர்.

நாட்டின் மொத்த மின் தேவையில் 70 சதவீதம் நிலக்கரி மூலம் இயக்கப்படும் அனல் மின் நிலையங்களில் இருந்தே கிடைக்கிறது. இந்நிலையில் நாட்டில் உள்ள 135 அனல் மின் நிலையங்களில், 50 சதவீதத்துக்கும் மேற்பட்டவற்றில் போதிய நிலக்கரி கையிருப்பில் இல்லை என செய்திகள் வெளியாயின.'போதிய நிலக்கரி கையிருப்பு இல்லாததால் மின்தடையை சந்திக்க நேரிடும்' என, தமிழகம், ஒடிசா, பஞ்சாப், டில்லி, ஆந்திரா உள்பட பல மாநிலங்கள் கூறியுள்ளன. அதிக நிலக்கரியை ஒதுக்கும்படி மத்திய அரசுக்கு பல மாநில முதல்வர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.


முற்றிலும் தவறானதுஇந்தப் பிரச்னை குறித்து மத்திய நிலக்கரி அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:அனல் மின் நிலையங்களில் நான்கு நாட்களுக்கு தேவையான 72 லட்சம் டன் நிலக்கரி உள்ளது. இதைத் தவிர, கோல் இந்தியா எனப்படும் இந்திய நிலக்கரி நிறுவனத்திடம், 24 நாட்களுக்கு தேவையான, 400 லட்சம் டன் நிலக்கரி உள்ளது. அவற்றை அனல்மின் நிலையங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.நிலக்கரிக்கு எந்தத் தட்டுப்பாடும் இல்லை. அதனால், மின்தடை ஏற்படும் என்ற வாதம் முற்றிலும் தவறானது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறியுள்ளதாவது:கொரோனா பாதிப்பில் இருந்து நம் தொழில்கள் மீண்டு வருவதால் மின் தேவை மிக அதிக அளவில் உயர்ந்துள்ளது. செப்., மாதத்தில் மட்டும் அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி 24 சதவீதம் உயர்ந்துள்ளது.அனல் மின் நிலையங்களில் சுழற்சி முறையில்தான் நிலக்கரி பயன்படுத்தப் படும். பருவமழை காரணமாக நிலக்கரி வினியோகத்தில் சற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் தட்டுப்பாடு என்று கூற முடியாது.போதிய அளவில் நிலக்கரி கையிருப்பில் உள்ளதால், மின்தடை ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.


முக்கிய காரணம்

இந்நிலையில் பா.ஜ., வைச் சேர்ந்தவரும், மத்திய மின் துறை அமைச்சருமான ஆர்.கே. சிங் கூறியுள்ளதாவது:மின் உற்பத்தியில் உள்ள 'கெயில், டாடா' நிறுவனங்கள், வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிய, எஸ்.எம்.எஸ்., எனப்படும் குறுஞ்செய்தி தான் பிரச்னைக்கு முக்கிய காரணம். இந்த நிறுவனங்கள் பொறுப்பில்லாமல் இவ்வாறு தகவல் அனுப்பி உள்ளது குறித்து எச்சரிக்கப் பட்டுள்ளது.

நிலக்கரிக்கு எந்தத் தட்டுப்பாடும் இல்லை; மின்சாரத் தடைக்கும் வாய்ப்பு இல்லை. ஆனால், வேண்டுமென்றே சிலர் வீணாக பீதியை கிளப்பி விட்டுள்ளனர். நிலக்கரி வினியோகம் தொடர்பாக தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையே தமிழகத்திலும் மின்வெட்டுக்கு வாய்ப்பில்லை என, அதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர்.


மணீஷ் சிசோடியா தாக்கு

'இரண்டு நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே உள்ளது. டில்லி இருளில் மூழ்கும் அபாயம் உள்ளது' என, டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.இந்தப் பிரச்னை தொடர்பாக டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறியதாவது:

'நிலக்கரிக்கு எந்தத் தட்டுப்பாடும் இல்லை. பிரதமர் மோடிக்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியிருக்கக் கூடாது' என, மத்திய அமைச்சர் ஆர்.கே. சிங் கூறியுள்ளார். மத்திய அமைச்சர் பொறுப்பில்லாமல் இருப்பது வருத்தமளிக்கிறது.பிரச்னையில் இருந்து தப்பி ஓட மத்திய அரசு முயற்சிப்பது தெளிவாக தெரிகிறது.

கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருந்தபோது, ஆக்சிஜன் தட்டுப்பாடு குறித்து மாநிலங்கள் எச்சரித்தன. ஆனால், அதை மத்திய அரசு ஏற்கவில்லை.பிரச்னை உள்ளது என்றால் அதை ஏற்கும் தைரியம் மத்திய அரசுக்கு வேண்டும். ஆனால் கண்மூடித்தனமாக செயல்படுகின்றனர். ஏதோ மாநிலங்கள் தான் தவறு செய்வதுபோல் சித்தரிக்கின்றனர்; இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடும்.இவ்வாறு அவர் கூறினார்.


மின் தேவை குறைந்ததுமத்திய அரசு மின்சார அமைச்சகத்தின் புள்ளி விபரங்களின்படி, நாட்டின் மின் தேவை, ஒரே நாளில், 7.2 கோடி யூனிட் குறைந்துள்ளது.கடந்த 7ம் தேதி 390 கோடி யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது இந்த மாதத்திலேயே மிகவும் அதிகமாகும். இந்நிலையில நேற்று முன்தினம் அது, 382.8 கோடி யூனிட்டாக குறைந்தது. அதாவது ஒரே நாளில், மின் தேவை 2 சதவீதம் குறைந்துள்ளது.

இதற்கிடையே நேற்று முன்தினம் மட்டும் அனல் மின் நிலையங்களுக்கு, 19.2 லட்சம் டன் நிலக்கரி அனுப்பட்டுள்ளது. அதே நேரத்தில், 18.7 லட்சம் டன் பயன்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (4+ 10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
11-அக்-202107:38:19 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் பிரதமர் மாளிகைக்கு எந்த பிரச்சினையும் இல்லை.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
11-அக்-202106:37:50 IST Report Abuse
Kasimani Baskaran மோடி தோல்வியடைந்துவிட்டார் என்று காட்டும் நோக்கத்தோடு இந்தியாவில் நிலக்கரிப்பற்றாக்குறை என்பது சர்வதேச அளவில் உருவாக்கப்பட்ட பொய்ச்செய்தி. சீனாவில் தட்டுப்பாடு என்றால் உலகத்திலே தட்டுப்பாடு என்ற நிலை வரவேண்டும் என்பது கம்மிகளின் விருப்பம்.
Rate this:
ramesh - chennai,இந்தியா
11-அக்-202115:38:34 IST Report Abuse
rameshஉத்திர பிரதேசம் பன்னிரண்டு மணி நேர மின்தடை ,பிஹாரில் மின்தடை இவை எல்லாம் நிலக்கரியை வெறும் பானைக்குள் பதுக்கிவைத்து மூடிபோட்டு மூடிவைத்ததால் நிலக்கரி தட்டு பாடு வந்ததா காசிமணி பாஸ்கரன் அவர்களே...
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
11-அக்-202102:44:33 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் தங்கமணி ரிப்போர்ட்டா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X