மோடி சிறந்த ஜனநாயகவாதி: அமித் ஷா

Updated : அக் 12, 2021 | Added : அக் 10, 2021 | கருத்துகள் (14+ 22)
Share
Advertisement
புதுடில்லி:''பிரதமர் நரேந்திர மோடி சில நேரங்களில் சர்வாதிகாரியை போல நடந்து கொள்வார் என கூறப்படுவது தவறான கருத்து. அவர் மிகச் சிறந்த ஜனநாயகவாதி,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.மத்திய அரசின் 'சன்ஸத் டிவி'யில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேட்டி ஒளிபரப்பானது. அதில் அவர் கூறியிருப்பதாவது:'பிரதமர் நரேந்திர மோடி தன் கருத்துகளை
 மோடி,சிறந்த ,ஜனநாயகவாதி,அமித் ஷா

புதுடில்லி:''பிரதமர் நரேந்திர மோடி சில நேரங்களில் சர்வாதிகாரியை போல நடந்து கொள்வார் என கூறப்படுவது தவறான கருத்து. அவர் மிகச் சிறந்த ஜனநாயகவாதி,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

மத்திய அரசின் 'சன்ஸத் டிவி'யில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேட்டி ஒளிபரப்பானது. அதில் அவர் கூறியிருப்பதாவது:

'பிரதமர் நரேந்திர மோடி தன் கருத்துகளை மற்றவர்கள் மீது திணிப்பார். சில நேரங்களில் சர்வாதிகாரியை போல நடந்து கொள்வார்' என, கூறப்படுவதில் துளியும் உண்மைஇல்லை. அவர் சிறந்த ஜனநாயகவாதி.அமைச்சரவை கூட்டங்கள் அல்லது முக்கிய பிரச்னைகள் குறித்து கூட்டங்கள் நடக்கும்போது, மோடி மிக குறைவாகவே பேசுவார். மற்றவர்கள் பேசுவதை கவனமாக கேட்டுக் கொள்வார். பின் இரண்டு அல்லது மூன்று கூட்டங்களுக்கு பின் முடிவெடுப்பார்.

கூட்டங்களில் ஒருவர் கூறும் யோசனையை அதன் தரத்தை வைத்து பிரதமர் மதிப்பிடுவாரே தவிர, அதை சொல்லும் நபரை வைத்து மதிப்பிட்டதே இல்லை. மற்றவர்கள் பேசுவதை காது கொடுத்து கேட்பதில் பிரதமர் மோடியை போல ஒருவரை நான் சந்தித்தில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (14+ 22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
11-அக்-202115:15:51 IST Report Abuse
S.Baliah Seer வேலிக்கு ஓணான் சாட்சி.
Rate this:
Cancel
மனிதன் - riyadh,சவுதி அரேபியா
11-அக்-202113:27:14 IST Report Abuse
மனிதன் இப்படி, நீங்களே மாத்தி மாத்தி புகழ்ந்து சந்தோஷப்பட்டுக்க வேண்டியதுதான்....
Rate this:
Cancel
Tamilarasan Tamilan - Alain,ஐக்கிய அரபு நாடுகள்
11-அக்-202111:55:25 IST Report Abuse
Tamilarasan Tamilan ஹாஹா மோடியை பற்றி யார் புகழ்வது பாருங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X