சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தீக்காயமடைந்த வாலிபர் பலி

Added : அக் 10, 2021
Share
Advertisement
மீஞ்சூர் : ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் தீக்காயங்களுடன் இருந்த வாலிபரை போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி இறந்தார்.மீஞ்சூர் அடுத்த, நாலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபிநாதன், 33. இவர், நேற்று முன்தினம் காலை, உறவினர்களுக்கு போன் செய்து, நாலுார் ஏரிக்கரை அருகே தன்னை, ஆறு பேர் கொண்ட கும்பல் பெட்ரோல் ஊாற்றி எரித்து விட்டதாக தகவல்

மீஞ்சூர் : ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் தீக்காயங்களுடன் இருந்த வாலிபரை போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி இறந்தார்.

மீஞ்சூர் அடுத்த, நாலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபிநாதன், 33. இவர், நேற்று முன்தினம் காலை, உறவினர்களுக்கு போன் செய்து, நாலுார் ஏரிக்கரை அருகே தன்னை, ஆறு பேர் கொண்ட கும்பல் பெட்ரோல் ஊாற்றி எரித்து விட்டதாக தகவல் தெரிவித்து உள்ளார்.உறவினர்கள் அங்கு சென்று பார்த்தபோது, கோபிநாதன் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். மீஞ்சூர் போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்று, உடலில் தீக்காயங்களுடன் இருந்த கோபிநாதனை மீட்டு, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தினர்.மருத்துவச் சிகிச்சையில் இருந்த கோபி, நேற்று முன்தினம் நள்ளிரவு இறந்தார். மீஞ்சூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X