பொது செய்தி

தமிழ்நாடு

நவராத்திரி விழாவில் அத்தி வரதர் அலங்காரம்

Added : அக் 10, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம், அறிஞர் அண்ணா நெசவாளர் குடியிருப்பு ராஜகணபதி, பவானி அம்மன், பாலமுருகன் கோவில், நவராத்திரி விழாவில், ஆதி அத்திவரதர் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.காஞ்சிபுரம், அறிஞர் அண்ணா நெசவாளர் குடியிருப்பு, திருவள்ளுவர் 2வது குறுக்கு தெருவில், ராஜ கணபதி, பவானி அம்மன் மற்றும் பாலமுருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி
 நவராத்திரி விழாவில் அத்தி வரதர் அலங்காரம்

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம், அறிஞர் அண்ணா நெசவாளர் குடியிருப்பு ராஜகணபதி, பவானி அம்மன், பாலமுருகன் கோவில், நவராத்திரி விழாவில், ஆதி அத்திவரதர் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

காஞ்சிபுரம், அறிஞர் அண்ணா நெசவாளர் குடியிருப்பு, திருவள்ளுவர் 2வது குறுக்கு தெருவில், ராஜ கணபதி, பவானி அம்மன் மற்றும் பாலமுருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.அதன்படி, 6ம் ஆண்டு நவராத்திரி விழா, கடந்த 5ம் தேதி காலை, மஹா கணபதி ஹோமம் மற்றும் காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் விமரிசையாக துவங்கியது.

பவானி அம்மன், பச்சை முத்து, கிரஹலட்சுமி, சந்தான லட்சுமி என, தினமும் பல்வேறு அலங்காரத்தில் பவானி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.ஐந்தாம் நாளான நேற்று முன்தினம் மாலை, ஆதி அத்திவரதர் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, சிறுவர் - சிறுமியருக்கான விளையாட்டு நிகழ்ச்சி நடந்தது. விழாவில், ஓரிக்கை அறிஞர் அண்ணா நெசவாளர் குடியிருப்பு மற்றும் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X