சர்வதேச ஸ்கேட்டிங் போட்டிக்கு கோவை மாணவர் தேர்வு

Added : அக் 10, 2021
Share
Advertisement
கோவை:கொலம்பியா நாட்டில் நடக்கவுள்ள சர்வதேச அளவிலான ஸ்கேட்டிங் போட்டிக்கு கோவை, பி.எஸ்.பி.பி., பள்ளியின் பிளஸ் 2 மாணவர் ரிஷப், தேர்வாகி உள்ளார்.கோவை, வடவள்ளி பகுதியை சேர்ந்த ஸ்ரீதர்- லட்சுமிபிரியா தம்பதியரின் மகனான ரிஷப், 17, நண்பர்களுடன் இணைந்து விளையாட்டாக ஸ்கேட்டிங் விளையாட்டை துவங்கினர்.பயிற்சியாளர்களின் அறிவுறுத்தலின் படி, முறையான பயிற்சியை துவங்கினார். முதலாவது

கோவை:கொலம்பியா நாட்டில் நடக்கவுள்ள சர்வதேச அளவிலான ஸ்கேட்டிங் போட்டிக்கு கோவை, பி.எஸ்.பி.பி., பள்ளியின் பிளஸ் 2 மாணவர் ரிஷப், தேர்வாகி உள்ளார்.கோவை, வடவள்ளி பகுதியை சேர்ந்த ஸ்ரீதர்- லட்சுமிபிரியா தம்பதியரின் மகனான ரிஷப், 17, நண்பர்களுடன் இணைந்து விளையாட்டாக ஸ்கேட்டிங் விளையாட்டை துவங்கினர்.பயிற்சியாளர்களின் அறிவுறுத்தலின் படி, முறையான பயிற்சியை துவங்கினார். முதலாவது மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் கிடைத்த வெற்றி அவருக்கு ஒரு உற்சாகத்தை கொடுத்தது.தொடர்ந்து, மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளிலும் பல்வேறு பதக்கங்களை குவித்துள்ளார். 2018ம் ஆண்டு விசாகப்பட்டணத்தில் நடந்த தேசிய போட்டியில், 'ரிலே' பிரிவில் வெள்ளி வென்றார்.2019ம் ஆண்டு தேசிய போட்டியில், 'ரிலே' பிரிவில் முதலிடம், 'ரோடு ரேஸ்' பிரிவில் வெண்கலம் வென்றார். 2021ம் ஆண்டு பஞ்சாப், மொகாலியில் நடந்த தேசிய ஸ்கேட்டிங் போட்டியில் 'ரிங் பாயின்ட்ஸ்', 'ரோடு ரேஸ்' பிரிவில் முதலிடம், 'ரோடு பாயின்ட்ஸ்', மற்றும் 'ரிங் சிக்ஸ்' பிரிவில் மூன்றாமிடம் பிடித்து அசத்தினார்.தேசிய போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு, ரோலர் ஸ்கேட்டிங் பெடரேஷன் ஆப் இந்தியா (ஆர்.எஸ்.எப்.ஐ.,) சார்பில், இந்திய ஸ்கேட்டிங் அணி தேர்வு மொகாலியில் நடந்தது.இத்தேர்வின் முடிவில் சிறந்த 16 வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில், கோவை, சோமையம்பாளையம், பி.எஸ்.பி.பி., பள்ளியில் பிளஸ்2 படிக்கும் ரிஷப், 17, தேர்வாகி சாதனை படைத்தார். தேர்வாகிய வீரர்கள் கொலம்பியா நாட்டில் நடக்கவுள்ள சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.'பயிற்சியாளர்களால் சாத்தியம் ஆனது'ரிஷப் கூறுகையில், ''கடந்த 10 ஆண்டுகளாக ஸ்கேட்டிங் பயிற்சி பெற்று வருகிறேன். சத்தியமூர்த்தி, ஜினத் ராஜ் அவர்களின் பயிற்சியினால், மாநில மற்றும் தேசிய போட்டிகளில் பல்வேறு வெற்றிகளை குவிக்க முடிந்தது. முதல் முறையாக சர்வதேச போட்டியில் பங்கேற்க உள்ளேன். கடுமையான பயிற்சியின் மூலம் பதக்கம் வெல்வேன்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X