பொது செய்தி

தமிழ்நாடு

பஸ் நிலையத்தில் முகாம் மழையால் இடம் மாற்றம்

Added : அக் 10, 2021
Share
Advertisement
பொதட்டூர்பேட்டை : பொதுமக்களின் நலனில் அக்கறையுடன் செயல்பட்டு வரும் மருத்துவ முகாமை, பாதுகாப்பான இடத்தில் நடத்த வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதட்டூர்பேட்டை பஸ் நிலையத்தில், சில மாதங்களாக, மருத்துவ முகாம் நடந்து வருகிறது. தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள பந்தலில் முகாம் நடந்து வருகிறது.பஸ் நிலையத்தில் இரும்பு கம்பிகள் மற்றும் கயிறுகளை பயன்படுத்தி,

பொதட்டூர்பேட்டை : பொதுமக்களின் நலனில் அக்கறையுடன் செயல்பட்டு வரும் மருத்துவ முகாமை, பாதுகாப்பான இடத்தில் நடத்த வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதட்டூர்பேட்டை பஸ் நிலையத்தில், சில மாதங்களாக, மருத்துவ முகாம் நடந்து வருகிறது. தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள பந்தலில் முகாம் நடந்து வருகிறது.பஸ் நிலையத்தில் இரும்பு கம்பிகள் மற்றும் கயிறுகளை பயன்படுத்தி, பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இது பயணியருக்கு இடையூறாக உள்ளது.இந்நிலையில், சில நாட்களாக மழை பெய்யும் நேரத்தில் மட்டும், பந்தலில் இருந்து பந்தலுக்கு பின்புறம் உள்ள நிழற்குடைக்கு முகாம் மாற்றப்படுகிறது.நிழற்குடையிலேயே, மருத்துவ முகாமை நிரந்தரமாக நடத்தினால், பயணியருக்கு எந்தவித இடையூறும் ஏற்படாது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.அதே நேரம், மாலை நேரத்தில் பந்தலுக்குள் வெயில் புகுவதால், மருத்துவ பணியாளர்களும் அவதிப்பட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X