பொது செய்தி

தமிழ்நாடு

உரக்கட்டுப்பாடு சட்டத்தை மீறிய கடைகளுக்கு தடை

Added : அக் 10, 2021
Share
Advertisement
கோவை:கோவையில் உரக்கட்டுப்பாடு சட்டத்தை மீறி உரம் விற்பனை செய்த தனியார் உரக்கடைகளுக்கு, உரம் விற்பனை செய்ய தடை விதித்து, வேளாண் இணை இயக்குனர் சித்ராதேவி உத்தரவிட்டு உள்ளார்.வேளாண் இயக்குனர் உத்தரவின்படி, இணை இயக்குனர் சித்ராதேவி தலைமையில், 12 அதிகாரிகள் கொண்ட சிறப்புக்குழு அமைக்கப்பட்டு, கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து உரக்கடைகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.அரசு

கோவை:கோவையில் உரக்கட்டுப்பாடு சட்டத்தை மீறி உரம் விற்பனை செய்த தனியார் உரக்கடைகளுக்கு, உரம் விற்பனை செய்ய தடை விதித்து, வேளாண் இணை இயக்குனர் சித்ராதேவி உத்தரவிட்டு உள்ளார்.வேளாண் இயக்குனர் உத்தரவின்படி, இணை இயக்குனர் சித்ராதேவி தலைமையில், 12 அதிகாரிகள் கொண்ட சிறப்புக்குழு அமைக்கப்பட்டு, கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து உரக்கடைகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.அரசு நிர்ணயித்த விலையில் மானிய உரங்கள் விற்பனை செய்யப்படுகிறதா, உரக்கட்டுப்பாடு சட்டத்தின் படி பதிவேடுகள் பராமரிக்கப்படுகிறதா, இருப்பு மற்றும் விலை விபரப்பட்டியல் விவசாயிகளின் பார்வையில் படும்படி வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தனர்.மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சித்ராதேவி கூறுகையில், ''இங்குள்ள தனியார் உரக்கடைகளை ஆய்வு செய்ததில், ஆறு உரக்கடைகள் உரக்கட்டுப்பாடு சட்டத்தை மீறி செயல்பட்டு இருப்பது தெரியவந்தது. அந்த கடைகளுக்கு உரம் விற்பனை செய்ய தடை விதித்து, நடவடிக்கை எடுக்ப்பட்டுள்ளது.'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X