பொது செய்தி

தமிழ்நாடு

நிறம் மாறிய நெல்லால் விவசாயிகள் வேதனை

Added : அக் 10, 2021
Share
Advertisement
வாலாஜாபாத், : நல்லுார் கிராமத்தில், 15 நாட்களாக நெல் கொள்முதல் செய்யும் பணியை அதிகாரிகள் நிறுத்தியதால், விவசாயிகளின் நெல்லின் நிறம் மாறி உள்ளது.வாலாஜாபாத் அடுத்த, தென்னேரி குறு வட்டத்தில், 7,000 ஏக்கரில் நெல் சாகுபடி செய்து உள்ளனர். பெரும்பாலான விவசாயிகளின் நெற்கதிர்கள் அறுவடை செய்து, சாலை ஓரங்களில் நெல்லை கொட்டி, தார்பாய் போட்டு மூடி வைத்து உள்ளனர்.விவசாயிகளின் நெல்
 நிறம் மாறிய நெல்லால் விவசாயிகள் வேதனை

வாலாஜாபாத், : நல்லுார் கிராமத்தில், 15 நாட்களாக நெல் கொள்முதல் செய்யும் பணியை அதிகாரிகள் நிறுத்தியதால், விவசாயிகளின் நெல்லின் நிறம் மாறி உள்ளது.

வாலாஜாபாத் அடுத்த, தென்னேரி குறு வட்டத்தில், 7,000 ஏக்கரில் நெல் சாகுபடி செய்து உள்ளனர். பெரும்பாலான விவசாயிகளின் நெற்கதிர்கள் அறுவடை செய்து, சாலை ஓரங்களில் நெல்லை கொட்டி, தார்பாய் போட்டு மூடி வைத்து உள்ளனர்.விவசாயிகளின் நெல் கொள்முதல் செய்வதற்கு, நுகர்பொருள் வாணிப கழகத்தினர், நல்லுார் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவக்கப்பட்டு உள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம், 20ம் தேதி முதல், நெல் கொள்முதல் செய்யவில்லை என, விவசாயிகளிடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதனால், சாலை ஓரம் கொட்டி தார்பாய் போட்டு மூடிய நெல்லின் நிறம் மாறி உள்ளது. இந்த நெல்லை உலர்த்தும் பணியில் விவசாயிகள் வேதனையுடன் ஈடுபட்டுள்ளனர்.எனவே, நல்லுார் கிராமத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் நெல் கொள்முதலை துவக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து, தேவரியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:அறுவடை செய்த நெல்லை, கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதற்கு, சாலை ஓரமாக நெல்லை கொட்டி தார்பாய் போட்டு மூடி வைத்திருந்தோம். 15 நாட்களாக நெல் கொள்முதல் செய்யாததால், சமீபத்தில் பெய்த மழைக்கு, நெல்லின் நிறம் மாறிவிட்டது.அதை உலர்த்தி வருகிறோம். அதிகாரிகள் தான் கொள்முதல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X