புதர் காடாக மாறிய கூவம் ஆறு

Added : அக் 10, 2021
Share
Advertisement
அரண்வாயல் : அரண்வாயல் பகுதியில், சீமை கருவேல மரங்கள் சூழ்ந்து புதர் காடக மாறியுள்ள கூவம் ஆற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பேரம்பாக்கம் அடுத்த, கேசாவரம் அணைக்கட்டு பகுதியில் உருவாகும் கூவம் ஆறு, பேரம்பாக்கம், கொண்டஞ்சேரி, சத்தரை, அகரம், கடம்பத்துார், அதிகத்துார், மணவாள நகர், புட்லுார், அரண்வாயல் வழியாக, சென்னையில்

அரண்வாயல் : அரண்வாயல் பகுதியில், சீமை கருவேல மரங்கள் சூழ்ந்து புதர் காடக மாறியுள்ள கூவம் ஆற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேரம்பாக்கம் அடுத்த, கேசாவரம் அணைக்கட்டு பகுதியில் உருவாகும் கூவம் ஆறு, பேரம்பாக்கம், கொண்டஞ்சேரி, சத்தரை, அகரம், கடம்பத்துார், அதிகத்துார், மணவாள நகர், புட்லுார், அரண்வாயல் வழியாக, சென்னையில் நேப்பியர் பாலம் அருகே, கடலில் கலக்கிறது.இதில், பேரம்பாக்கம், சத்தரை, மணவாள நகர், புட்லுார், அரண்வாயல் உட்பட பல பகுதிகளில், கூவம் ஆற்றில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து காடு போல காட்சி அளிக்கிறது.இதனால், ஆற்றில் மழை பெய்யும் போது ஆற்றில் நீர் சேகரமாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், சில மாதங்களுக்கு முன், ஏரி, குளங்களை துார் வாரி சீரமைக்கும் பணி நடந்து வந்த நிலையில், கூவம் ஆற்றில் காடு போல வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற, மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது பொதுமக்களிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, கூவம் ஆற்றில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''கூவம் ஆற்றில் கருவேல மரங்கள் அகற்றுவது குறித்து, அரசுக்கு திட்ட அறிக்கை தயார் செய்து அனுப்பி உள்ளோம். அரசிடமிருந்து உத்தரவு வந்தவுடன், கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X