போலீஸ் டைரி: இளம்பெண்ணின் நகை திருட்டு

Added : அக் 10, 2021
Share
Advertisement
ஈரோடு, சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் சங்கீதா, 24. இவர் நேற்று முன் தினம் பாரதியார் பல்கலையில் இருந்து காந்திபுரத்துக்கு, தனியார் பஸ்சில் வந்தார். பஸ் ஸ்டாண்டு வந்து இறங்கி பார்த்தபோது அவரது கழுத்தில் இருந்த, ஒன்றரை பவுன் நகை திருடுபோனது தெரிந்தது. அவர் அளித்த புகாரின்பேரில் காட்டூர் போலீசார்வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.வீட்டு கதவுடைத்து

ஈரோடு, சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் சங்கீதா, 24. இவர் நேற்று முன் தினம் பாரதியார் பல்கலையில் இருந்து காந்திபுரத்துக்கு, தனியார் பஸ்சில் வந்தார். பஸ் ஸ்டாண்டு வந்து இறங்கி பார்த்தபோது அவரது கழுத்தில் இருந்த, ஒன்றரை பவுன் நகை திருடுபோனது தெரிந்தது. அவர் அளித்த புகாரின்பேரில் காட்டூர் போலீசார்வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

வீட்டு கதவுடைத்து திருட்டு
விளாங்குறிச்சி ரோடு, ஸ்ரீ குமரன் மாநகரை சேர்ந்தவர் சுரேஷ் முத்துராஜா, 31. இவர் கடந்த சில நாட்களுக்கு முன், வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊரான துாத்துக்குடிக்கு சென்றார். மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவை, மர்ம நபர்கள் உடைத்து பீரோவில் வைத்திருந்த, 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்க மற்றும் வெள்ளி பொருட்கள், மொபைல்போன் உள்ளிட்டவற்றை திருடி சென்றது தெரிந்தது. இதுதொடர்பாக அளித்த புகாரின்பேரில், சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
மொபைல்போன் பறித்தவர் கைது
சிங்காநல்லுார், அண்ணா நகர் முதல் தெருவை சேர்ந்தவர் பரணிதரன், 19. இவர் நேற்று முன்தினம் நண்பருடன் கிருஷ்ணா கார்டன் அருகே நடந்து சென்றார். அப்போது இவரை வழிமறித்த ஒரு வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி மொபைல்போனை பறித்து சென்றார். சிங்காநல்லுார் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து மொபைல்போன் பறித்த நீலிக்கோணாம்பாளையத்தை சேர்ந்த அரவிந்த்குமார், 19 என்பவரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X