பல்கலை செல்லும் சாலையில் வெளிச்சமில்லை!

Added : அக் 10, 2021
Share
Advertisement
துாய்மை பணியை மறந்த பணியாளர்கள்கீரணத்தம் ஊராட்சி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில், துாய்மை பணி முறையாக மேற்கொள்ளப்படுவதில்லை. இங்கு வரும் பணியாளர்கள், 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே, துாய்மை பணி மேற்கொள்வதால், ஆங்காங்கே குப்பை குவிந்துள்ளது.- சக்திவேல், கீரணத்தம்.நிரம்பி வழியுது குப்பை தொட்டிகோவைபுதுார் - சுண்டக்காமுத்துார் ரோட்டில் உள்ள, குப்பை

துாய்மை பணியை மறந்த பணியாளர்கள்கீரணத்தம் ஊராட்சி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில், துாய்மை பணி முறையாக மேற்கொள்ளப்படுவதில்லை. இங்கு வரும் பணியாளர்கள், 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே, துாய்மை பணி மேற்கொள்வதால், ஆங்காங்கே குப்பை குவிந்துள்ளது.- சக்திவேல், கீரணத்தம்.

நிரம்பி வழியுது குப்பை தொட்டிகோவைபுதுார் - சுண்டக்காமுத்துார் ரோட்டில் உள்ள, குப்பை தொட்டி நிரம்பி வழிகிறது. இதனால், இதன் அருகிலேயே குப்பை குவிக்கப்படுகிறது. குப்பையை அகற்றி, சுகாதார சீர்கேட்டை தடுக்க வேண்டும்.- நாசர்தீன், குனியமுத்துார்.

மரக்கழிவுகளை அகற்ற வேண்டும்மாநகராட்சி, 66வது வார்டுக்கு உட்பட்ட, பி.ஆர்.நகர், கண்ணபிரான் மில் ரோட்டில் சாலையோரம், மரக்கழிவுகள், காய்ந்த மரக்கிளைகள் குவிக்கப்படுவதை தடுக்க வேண்டும்.- ஜெகநாதன், பி.ஆர்.நகர்.

சாலையை புதுப்பிக்கணும்நீலிக்கோணாம்பாளையம், நேதாஜிபுரம், மத்திய உணவு குடோன் எதிர்புறம் உள்ள, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதியில், சாலை குண்டும் குழியுமாக உள்ளது. மழை காலங்களில், இச்சாலை முழுவதும் சேறும் சகதியுமாக மாறி, நடந்து செல்ல வழியின்றி, மக்கள் அவதிப்படுகின்றனர். இப்பகுதியில் தார் சாலை அமைக்க வேண்டும்.- ஜெகன்,

சிங்காநல்லுார்.

கழிவுகளால் ஆபத்துகவுண்டம்பாளையம், எஸ்.கே.ஆர்., நகர் இரண்டாவது வீதியில், தொட்டியில் நிரம்பும் குப்பை உடனுக்குடன் அப்புறப்படுத்தப்படுவதில்லை. இதனால், இதில் குவியும் குப்பை வீட்டு கால்நடைகளுக்கு உணவாக மாறி வருகிறது; கால்நடைகளுக்கு நோய் தொற்று ஏற்படுகிறது. குப்பையை முறையாக அப்புறப்படுத்த வேண்டும்.- கார்த்தி, எஸ்.கே.ஆர்., நகர்.

வாய்க்காலை துார்வாரணும்மாநகராட்சி, 64வது வார்டுக்கு உட்பட்ட, உப்பிலிபாளையம், ஆர்.வி.எல்.காலனி அருகில், குளத்தேரிக்கு மழைநீர் கொண்டு செல்லும் வாய்க்கால், குப்பை மற்றும் செடி, கொடிகளால், அடைபட்டுள்ளது. இந்த வாய்க்காலை துார் வாரி, மழைநீர் தடையின்றி குளத்தேரிக்கு செல்ல வழி ஏற்படுத்த வேண்டும்.- ரவி, உப்பிலிபாளையம்.

பல்கலை அருகே வெளிச்சமில்லைதடாகம் ரோட்டில் இருந்து, மேட்டுப்பாளையம் செல்லும், அவினாசிலிங்கம் பல்கலை ரோட்டில் உள்ள, மின் கம்பங்களில் விளக்குகள் எரிவதில்லை.- ரகுநந்தன், சாய்பாபா காலனி.

பார்க்கிங் பகுதியானது நடைபாதைஆர்.எஸ்.புரம், திருவேங்கடசாமி ரோட்டில், நடைபாதையில் வாகனங்கள் பார்க் செய்யப்படுவதால், நடக்க வழியின்றி, பாதசாரிகள் அவதிப்படுகின்றனர்.- சுந்தரம், ஆர்.எஸ்.புரம்.

விளக்கு எரிவதில்லைமாநகராட்சி, 60வது வார்டுக்கு உட்பட்ட, ஒண்டிப்புதுார், ஆஞ்சநேயர் காலனியில், ரேஷன் கடை அருகில் உள்ள, மின் கம்பத்தில்(எண்: 2) கடந்த ஆறு மாதங்களாக விளக்கு எரிவதில்லை. மின் வாரியத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.- விஸ்வநாதன், ஆஞ்சநேயர் காலனி.

சாலை எல்லாம் ஜல்லி கற்கள்பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள வீதிகளில், சாலை செப்பனிடும் பணி, கடந்தாண்டு துவக்கப்பட்டு, ஜல்லி கற்கள் கொட்டப்பட்டதுடன் நிறுத்தப்பட்டுள்ளது. நிறுத்தப்பட்ட பணியை மீண்டும் துவக்கி, சாலையை சீரமைக்க வேண்டும்.- ராமசந்திரன், பாப்பநாயக்கன்பாளையம்.

புது விளக்கு பொருத்தணும்மாநகராட்சி, 22வது வார்டுக்கு உட்பட்ட, வடகோவை, சென்ட்ரல் தியேட்டர் அருகில், திருவேங்கடம் வீதியில் உள்ள, மின் கம்பத்தில்(எண்: 2) விளக்கு பழுதாகி, விட்டு விட்டு எரிகிறது. இவ்விளக்கை அகற்றிவிட்டு, புது விளக்கு பொருத்த வேண்டும்.- கமலா, திருவேங்கடம் வீதி.

பயனற்ற பொதுக்குழாய்ரேஸ்கோர்ஸ், டி.ஆர். ஓ., காம்பவுண்டு பகுதியில் உள்ள, பொதுக்குழாய், ஓராண்டுக்கு முன், சிதிலமடைந்ததால், தற்காலிகமாக துண்டிக்கப்பட்டது. சிதிலமடைந்த குழாயை சீரமைக்காமல் விட்டு விட்டனர். குடிநீர் குழாய் அமைந்துள்ள இடமும் பயன்பாட்டில் இல்லாததால், செடி கொடிகள் வளர்ந்து, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இக்குழாயை சீரமைப்பதுடன், இடத்தையும் துாய்மைபடுத்தி, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.- திருமூர்த்தி,

ரேஸ்கோர்ஸ்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X