பொது செய்தி

தமிழ்நாடு

சாலை விரிவாக்க பணி; மழை நீர் அகற்றம்

Added : அக் 10, 2021
Share
Advertisement
வாலாஜாபாத் : சாலை விரிவாக்க பணிக்கு, தரைப்பாலங்களின் அருகே, தேங்கி நிற்கும் மழை நீரை, ஜே.சி.பி., இயந்திரத்தின் மூலமாக, அகற்றும் பணி துவங்கப்பட்டு உள்ளது.சதுரங்கப்பட்டினம் - திருத்தணி வரை, 105 கி.மீ., நீளமுடைய, இருவழி சாலை உள்ளது. நிலம் அளவீடுஇச்சாலையில், வாகனங்களின் பயன்பாடு அதிகமாக இருப்பதால், நான்குவழி சாலையாக விரிவுபடுத்தும் பணியில், நெடுஞ்சாலைத் துறை

வாலாஜாபாத் : சாலை விரிவாக்க பணிக்கு, தரைப்பாலங்களின் அருகே, தேங்கி நிற்கும் மழை நீரை, ஜே.சி.பி., இயந்திரத்தின் மூலமாக, அகற்றும் பணி துவங்கப்பட்டு உள்ளது.

சதுரங்கப்பட்டினம் - திருத்தணி வரை, 105 கி.மீ., நீளமுடைய, இருவழி சாலை உள்ளது. நிலம் அளவீடுஇச்சாலையில், வாகனங்களின் பயன்பாடு அதிகமாக இருப்பதால், நான்குவழி சாலையாக விரிவுபடுத்தும் பணியில், நெடுஞ்சாலைத் துறை ஈடுபட்டுஉள்ளது.முதற்கட்டமாக, சதுரங்கப்பட்டினம் - செங்கல்பட்டு வரை, சாலை விரிவு படுத்தப்பட்டுள்ளது. இப்பணி, 2015ல் துவங்கி, 2018ல் முடிந்தது.இதையடுத்து, 2018ல், இரண்டாம் கட்டமாக, செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - திருத்தணி வரை விரிவாக்கம் செய்ய, நிலம் அளவீடு செய்யப்பட்டு உள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம், காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலை ஓரமிருக்கும் புளிய மரங்களை அகற்றப்பட்டன. இதையடுத்து, குதிரைகால் மடுவு, கம்பன் கால்வாய், புதுப்பாக்கம், கோவிந்தவாடி, பள்ளூர் ஆகிய பகுதிகளில், உயர் மட்ட தரை பாலம் மற்றும் சில இடங்களில் சிறிய ரக தரைப்பாலங்கள் கட்டுமான பணி துவக்கப்பட்டு உள்ளது.சமீபத்தில், பெய்த மழையால், தரைப்பாலங்கள் கட்டுமானம் அருகே, மழை நீர் சூழ்ந்துவிட்டது. அதை, சாலை விரிவாக்க பணியாளர்கள், ஜே.சி.பி., இயந்திரத்தின் உதவியுடன் அகற்றும் பணியை துவக்கி உள்ளனர்.இந்த பணி நிறைவு பெற்ற பின், தரைப்பாலங்கள் கட்டுமான பணிகள் துவக்கப்படும் என, நெடுஞ்சாலை துறையினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X