அரசியல் செய்தி

தமிழ்நாடு

'கேலோ இந்தியாவில் சிலம்பாட்டம்: 8 கோடி தமிழருக்கு கிடைத்த கவுரவம்'

Updated : அக் 12, 2021 | Added : அக் 10, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:''கேலோ இந்தியாவில், சிலம்பாட்டம் இணைக்கப்பட்டது, எட்டு கோடி தமிழர்களுக்கு கிடைத்த கவுரவம்,'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணமாலை பேசினார்.சிலம்பாட்டத்தை, 'கேலோ இந்தியா' எனப்படும் விளையாட்டு வளர்ச்சிக்கான தேசிய திட்டத்தில் இணைத்ததற்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி, சென்னை கொன்னுார் காந்திநகர் காலனியில் நேற்று நடந்தது. தமிழகம் முழுதும் இருந்து வந்திருந்த,
'கேலோ இந்தியாவில் சிலம்பாட்டம்: 8 கோடி தமிழருக்கு கிடைத்த கவுரவம்'

சென்னை:''கேலோ இந்தியாவில், சிலம்பாட்டம் இணைக்கப்பட்டது, எட்டு கோடி தமிழர்களுக்கு கிடைத்த கவுரவம்,'' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணமாலை பேசினார்.

சிலம்பாட்டத்தை, 'கேலோ இந்தியா' எனப்படும் விளையாட்டு வளர்ச்சிக்கான தேசிய திட்டத்தில் இணைத்ததற்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி, சென்னை கொன்னுார் காந்திநகர் காலனியில் நேற்று நடந்தது. தமிழகம் முழுதும் இருந்து வந்திருந்த, சிலம்பாட்ட வீரர்கள், பயிற்சியாளர்கள் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசியதாவது:சிலம்பத்தின் வயது நமக்கு தெரியாது. அகத்திய முனிவர் எப்போது வந்தாரோ, அப்போதே சிலம்பாட்ட கலையும் வந்தது. தமிழகத்திற்கு எவ்வளவு வயதோ, அவ்வளவு வயது சிலம்பத்திற்கு.

நம் பாரம்பரியத்தை விளையாட்டின் வாயிலாக எடுத்துச் சொல்ல வேண்டும் என்றால், சிலம்பத்தால் மட்டுமே முடியும்.அதனால் தான், கேலோ இந்தியாவில், சிலம்பாட்டதை பிரதமர் மோடி சேர்த்து இருக்கிறார். இது, எட்டு கோடி தமிழர்களுக்கு கிடைத்த கவுரவம். இனி, இந்த விளையாட்டில் தங்கம், வெள்ளி, வெண்கலம் பதக்கங்களை வென்று காட்டுவோம்.

பிரதமருக்கு நன்றி தெரிவிக்க, உலக சாதனை முயற்சியாக ஒரே நேரத்தில், 100 சிலம்பாட்ட ஆசான்கள், 1,000க்கும் மேற்பட்ட வீரர்கள் கூடி இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் இரண்டு லட்சம் முறை சிலம்பத்தை சுழற்றியுள்ளனர். இது, ஒரு உலக சாதனை முயற்சி.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
amuthan - kanyakumari,இந்தியா
11-அக்-202107:38:02 IST Report Abuse
amuthan தமிழ் மொழி பல்வேறு அரசு துறைகளில் இருந்து நீக்கப்பட்டதற்கு 8 கோடி தமிழர்களுக்கு கிடைத்த அவமானம் என்று கூறுவாரா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X