தமிழ்நாடு

கற்கள் எடுக்க வந்த தடையால் இட்லி, தோசைக்கு ஆபத்து! கிரைண்டர் உற்பத்தி முடக்கம்

Updated : அக் 11, 2021 | Added : அக் 10, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
கோவை:கிரைண்டர் உற்பத்திக்கு முக்கிய மூலதனமான கற்கள் கிடைக்காததால் தொழில் முடங்கி வருவதுடன், ஆண்டுக்கு, 600 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.கோவையின் தனித்துவம் மிக்க தொழிலான கிரைண்டர் தயாரிப்புக்கு, மத்திய அரசின் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இங்கு, 200க்கும் மேற்பட்ட கிரைண்டர் உற்பத்தியாளர்களும், இதை நம்பி, 30 ஆயிரம் தொழிலாளர்களும்
 கற்கள் எடுக்க வந்த தடையால் இட்லி, தோசைக்கு ஆபத்து! கிரைண்டர் உற்பத்தி முடக்கம்

கோவை:கிரைண்டர் உற்பத்திக்கு முக்கிய மூலதனமான கற்கள் கிடைக்காததால் தொழில் முடங்கி வருவதுடன், ஆண்டுக்கு, 600 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.கோவையின் தனித்துவம் மிக்க தொழிலான கிரைண்டர் தயாரிப்புக்கு, மத்திய அரசின் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இங்கு, 200க்கும் மேற்பட்ட கிரைண்டர் உற்பத்தியாளர்களும், இதை நம்பி, 30 ஆயிரம் தொழிலாளர்களும் உள்ளனர்.நம் நாட்டில் மட்டுமின்றி தமிழர்கள் வாழும் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கும் இங்கிருந்து கிரைண்டர்கள் ஏற்றுமதியாகின்றன.
இப்படி பெரும் பெயர் பெற்ற கிரைண்டர் தயாரிப்புக்கு, முக்கிய மூலப்பொருளான கற்கள், திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி குவாரிகளில் இருந்து கொண்டு வரப்படுகின்றன.தற்போது, சென்னை உயர்நீதிமன்றம், ஊத்துக்குளியில் உள்ள அனைத்து கல் குவாரிகளையும், சட்டத்துக்கு புறம்பானவை எனக்கூறி மூட உத்தரவிட்டுள்ளது. இதனால், கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக, கிரைண்டர் தயாரிப்பதற்கான கற்கள் கிடைப்பதில்லை. இதன் தாக்கத்தால், கிரைண்டர் தயாரிப்பு தொழில் முடங்குவதுடன், இதை நம்பியுள்ள, 30 ஆயிரம் பேரின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளதாக, கிரைண்டர் தயாரிப்பாளர்கள்குமுறுகின்றனர்.
கோவை வெட்கிரைண்டர் மற்றும் உதிரிபாக தயாரிப்பாளர்கள் சங்க(கவுமா) செயலாளர் பாலச்சந்தர் கூறியதாவது:ஊத்துக்குளி குவாரிகளுக்குநீதிமன்ற தடை உத்தரவு பிறப்பித்துள்ளதால், கற்கள் கிடைக்காமல், தொழில் முடங்கி வருகிறது;30 ஆயிரம் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது. கொரோனா முதல் அலைக்கு முன்பு, 135 ரூபாயாக இருந்த ஒரு கிலோ 'ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்' தற்போது, 200 ரூபாயாக உயர்ந்துள்ளது.மூலப்பொருட்கள் விலை உயர்வால், வேறு வழியின்றி வெட்கிரைண்டர் விலையை, 30 சதவீதம் உயர்த்தினோம்.

வாடிக்கையாளர்களோ, 5 முதல், 10 சதவீதமே உயர்த்தி தருவதால் இழப்பைசந்திக்கிறோம். வேலை இல்லாததால்,வெளிமாநில தொழிலாளர்களும் ஓட்டம் பிடிக்கும் நிலை உள்ளது.தமிழக அரசின், 1.70 கோடி இலவச கிரைண்டர்கள், கோவையில் இருந்துதான் ஒரு காலத்தில் தயாரித்து வழங்கப்பட்டன. தற்போதைய நிலை குறித்து மாவட்ட கலெக்டரிடம் மீண்டும் முறையிடவுள்ளோம். தமிழக அரசு எங்கள் மீது கருணை காட்ட வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
ஆண்டுக்கு 600 கோடி!கொரோனா ஊரடங்கு பாதிப்புகளில் இருந்து மீண்டு வரும் சூழலில், முக்கிய மூலதனமான கற்கள் தட்டுப்பாடு என்பது, ஆண்டுக்கு, 600 கோடி ரூபாய் வர்த்தகத்துக்கு தடையாகிவிடும் என்கின்றனர் கோவை கிரைண்டர் தயாரிப்பாளர்கள்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-அக்-202121:38:20 IST Report Abuse
அப்புசாமி ஜட்ஜுங்களுக்கு ஒரு மாசம் இட்லி , தோசை கட் னு சட்டம் கொண்டாரலாம்.
Rate this:
Cancel
11-அக்-202121:36:49 IST Report Abuse
அப்புசாமி இன்னும் கல்லெல்லாம் பாக்கி இருக்கா?
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
11-அக்-202111:13:41 IST Report Abuse
duruvasar கடப்பா கல்லை எடுத்துகிட்டு போயி சப்பாத்தி, பரோட்டா போடுங்கப்பா. ஸ்பிரிங் ரோல், நூடுல்ஸ், டிக்கிலோ இப்படி புதுசு புதுசா சைனீஸ் அயிட்டங்கள் சாப்பிட்டு பழகுங்க. எப்பப் பாத்தாலும் இட்லி தோசை வடகறின்னு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X