சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணல் லாரிகளை சிறை பிடித்த மக்கள்

Added : அக் 10, 2021
Share
Advertisement
திருத்தணி : திருத்தணி அடுத்த, இலுப்பூர் பகுதியில் செல்லும் கொசஸ்தலை ஆற்றில், நேற்று, இரண்டு லாரிகள், ஜே.சி.பி., உதவியுடன் மணல் அள்ளிக் கொண்டிருந்தது.தகவல் அறிந்ததும், அந்த கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர், ஆற்றுக்கு சென்று லாரிகளை சிறைப்பிடித்து, போராட்டம் நடத்தினர்.கனகம்மாசத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து லாரி ஓட்டுனர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது,

திருத்தணி : திருத்தணி அடுத்த, இலுப்பூர் பகுதியில் செல்லும் கொசஸ்தலை ஆற்றில், நேற்று, இரண்டு லாரிகள், ஜே.சி.பி., உதவியுடன் மணல் அள்ளிக் கொண்டிருந்தது.தகவல் அறிந்ததும், அந்த கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர், ஆற்றுக்கு சென்று லாரிகளை சிறைப்பிடித்து, போராட்டம் நடத்தினர்.

கனகம்மாசத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து லாரி ஓட்டுனர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, திருவள்ளூர் பகுதிக்கு பருவ மழை வெள்ளத் தடுப்பிற்காக மணல் மூட்டைகள் கட்டுவதற்கு மணல் அள்ளப்படுகிறது, அதற்கான உத்தரவு பொதுப்பணித் துறை அதிகாரிகள் வழங்கிய கடிதத்தையும் காண்பித்தனர்.பின், போலீசார் கிராம மக்களை சமரசம் செய்து லாரிகளை விடுவித்தனர். பின், பொதுமக்கள் போலீசாரிடம் அரசு அனுமதியின்றி மணல் அள்ளுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X