இ.சி.ஆர்., குழாய் பாலம் சேதம் புதிய சிறுபாலம் அமைப்பு| Dinamalar

இ.சி.ஆர்., குழாய் பாலம் சேதம் புதிய சிறுபாலம் அமைப்பு

Added : அக் 10, 2021 | |
மாமல்லபுரம் : ஓதியூர் கிழக்கு கடற்கரை சாலை குழாய் பால சேதத்தால், புதிய சிறுபாலம் அமைக்கப்படுகிறது.செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்த, ஓதியூர் பகுதியில், கிழக்கு கடற்கரை சாலையையொட்டி, பக்கிங்ஹாம் கால்வாய் நீர்பரப்பு பகுதி உள்ளது. நீர்பரப்பு பகுதியிலிருந்து, கால்வாய்க்கு நீர் செல்ல, சாலையின் குறுக்கில் சிறிய குழாய் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.இப்பாலம்,

மாமல்லபுரம் : ஓதியூர் கிழக்கு கடற்கரை சாலை குழாய் பால சேதத்தால், புதிய சிறுபாலம் அமைக்கப்படுகிறது.

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்த, ஓதியூர் பகுதியில், கிழக்கு கடற்கரை சாலையையொட்டி, பக்கிங்ஹாம் கால்வாய் நீர்பரப்பு பகுதி உள்ளது. நீர்பரப்பு பகுதியிலிருந்து, கால்வாய்க்கு நீர் செல்ல, சாலையின் குறுக்கில் சிறிய குழாய் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.இப்பாலம், நீண்டகாலத்திற்கு முன் அமைக்கப்பட்டு, வாகனங்கள் கடந்தன. தற்போது, போக்குவரத்து, அதிகரிக்கும் நிலையில், பழமையான பாலம், போக்குவரத்தை தாங்க இயலாமல், சரிந்து சேதமடைய துவங்கியது.முற்றிலும் சேதமடைந்து, போக்குவரத்து பாதிக்கப்படாமல் தவிர்க்க, தமிழ்நாடு சாலை மேம்பாடு நிறுவனம், பழைய பாலத்தை அகற்றி, தற்போது புதிய சிறுபாலம் அமைக்கிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X