பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறன் சிறுவனின் காலணியை பிடுங்கி வைத்துக்கொண்ட அதிகாரிகள்!

Added : அக் 10, 2021
Share
Advertisement
கோவை:மாற்றுத்திறன் கொண்ட சிறுவனுக்கு கலெக்டர் வழங்கிய சிறப்பு காலணியை, அரசு துறையினர் பறித்துக் கொண்டதாக புகார் எழுந்துள்ளது.கோவை போத்தனுார் ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் வேல்முருகன்; மாற்றுத்திறனாளி. பெட்டிக்கடை நடத்தி பிழைத்து வருகிறார். இவர், தனக்கு அரசு உதவி வேண்டும் என்று கோரி, கலெக்டரிடம் மனு அளித்திருந்தார். மாற்றுத்திறனாளியான தன் மூன்று வயது மகன் அழகுமணிக்கு,

கோவை:மாற்றுத்திறன் கொண்ட சிறுவனுக்கு கலெக்டர் வழங்கிய சிறப்பு காலணியை, அரசு துறையினர் பறித்துக் கொண்டதாக புகார் எழுந்துள்ளது.கோவை போத்தனுார் ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் வேல்முருகன்; மாற்றுத்திறனாளி. பெட்டிக்கடை நடத்தி பிழைத்து வருகிறார். இவர், தனக்கு அரசு உதவி வேண்டும் என்று கோரி, கலெக்டரிடம் மனு அளித்திருந்தார். மாற்றுத்திறனாளியான தன் மூன்று வயது மகன் அழகுமணிக்கு, சிறப்பு காலணி வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
பரிசீலனை செய்த கலெக்டர் சமீரன், உடனடியாக சிறுவனுக்கு சிறப்பு காலணி வழங்க உத்தரவிட்டார். அந்த காலணியை அவரே அணிவித்தார். இந்த செய்தி பத்திரிகைகளில் வெளியாகி, கலெக்டருக்கு நற்பெயரை பெற்றுத்தந்தது.இந்நிலையில், கலெக்டர் அணிவித்த சிறப்பு காலணியில் பழுது நீக்கித்தருவதாக கூறி, மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வுத்துறையினர் அதை வாங்கியுள்ளனர். இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் அதை திருப்பித்தரவில்லை என, வேல்முருகன் புகார் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், ''இரண்டு நாட்களில் பழுது சரி செய்து தருவதாக கூறி சிறப்பு காலணியை வாங்கினர். இரண்டு மாதங்களுக்கு மேலாகி விட்டது. போன் செய்தால் சரியான பதில் இல்லை. கலெக்டரே நேரடியாக ஷூ அணிவித்தபோது மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம். ஆனால், இப்போது அந்த மகிழ்ச்சி பறிபோய் விட்டது. எங்கள் மகன் வெறும் கால்களில் நடப்பதை காணும்போது வேதனையாக இருக்கிறது,'' என்றார்.
கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு அலுவலர் வசந்த ராம்குமாரிடம் கேட்டபோது, முதலில் ''இது பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. அலுவலர்களிடம் விசாரிக்கிறேன்,'' என்றார். என்ன ஆனதோ தெரியவில்லை, சிறிது நேரம் கழித்து அழைத்த அவர், ''சரி செய்யப்பட்ட காலணி, இன்று அல்லது நாளை வழங்கப்பட்டு விடும்,'' என்றார்.எப்படியோ வழங்கினால் சரி!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X