பொது செய்தி

தமிழ்நாடு

கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம்; கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

Added : அக் 10, 2021
Share
Advertisement
பள்ளிப்பட்டு : கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், ஆற்றின் கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஆற்றுப் பகுதியில் கால்நடைகள் மேய்ச்சலுக்கு ஒட்டிச் செல்ல வேண்டும் என, வருவாய் துறையினர் எச்சரித்துஉள்ளனர்.ஆந்திர மாநிலம், கிருஷ்ணாபுரம், அம்மப்பள்ளி அணைகட்டில் இருந்து, நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று அதிகாலை, 5:00 மணி வரை தண்ணீர் திறந்து
 கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம்; கரையோர மக்களுக்கு  எச்சரிக்கை

பள்ளிப்பட்டு : கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், ஆற்றின் கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,

ஆற்றுப் பகுதியில் கால்நடைகள் மேய்ச்சலுக்கு ஒட்டிச் செல்ல வேண்டும் என, வருவாய் துறையினர் எச்சரித்துஉள்ளனர்.ஆந்திர மாநிலம், கிருஷ்ணாபுரம், அம்மப்பள்ளி அணைகட்டில் இருந்து, நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று அதிகாலை, 5:00 மணி வரை தண்ணீர் திறந்து விடப்பட்டதால், கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

மேலும், கொசஸ்தலை ஆற்றின் மற்றொரு நீர்சாதமான, லவா ஆற்றில் இருந்தும், சில நாட்களாக நீர்வரத்து வருவதால், கூடுதல் நீர்வரத்தால், நெடியம் தரைப்பாலத்தின் மீது வெள்ளம் ஆர்ப்பரித்து பாய்கிறது. இதனால், ஆற்றின் ஓரமுள்ள கிராம மக்கள் ஆற்றை கடக்கவோ, மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்ல வேண்டாம் என, வருவாய் துறையினர் எச்சரித்துஉள்ளனர்.கொசஸ்தலை கடக்க வேண்டாம் பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால், ஆற்றின் கரையோரம் உள்ள நெற்குன்றம், பசுவன் பாளையம், காரனோடை, ஆத்துார், புதுகுப்பம், மடியூர், வன்னிப்பாக்கம் உட்பட 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஆற்றின் பகுதிக்கு செல்ல வேண்டாம். தங்களது மாடுகளை மேய்ப்பதற்கும் ஓட்டிச் செல்ல வேண்டாம்.மக்கள் ஆற்றை கடப்பதை தவிர்க்க வேண்டும் என, வருவாய் துறையினர் தண்டோரா மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்

.வேகமாக நிரப்பும் ஏரிகள்கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் ஓடுவதாலும், பொன்னை, சோளிங்கர் ஏரிகள் நிரம்பி உபரி நீர் திறந்து விட்டதால், திருத்தணி தாலுகாவில் உள்ள ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன.திருத்தணி பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் மகேஷ்பாபு கூறுகையில், 'திருத்தணி கோட்டத்தில், 79 ஏரிகளில், 12 ஏரிகள் முழுமையாக நிரப்பி, உபரி நீர் கடைவாசல் வழியாக செல்கிறது.

மேலும், 30 ஏரிகள், 85 சதவீதம் அளவிற்கும், 28 ஏரிகள், 75 சதவீதம் அளவிற்கும், தண்ணீர் நிரம்பியுள்ளன. மீதமுள்ள ஏரிகளிலும், 40 சதவீதத்திற்கு மேல் தற்போது தண்ணீர் உள்ளது' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X