பொது செய்தி

தமிழ்நாடு

நரசிம்ம பெருமாள் கோவில்

Added : அக் 10, 2021
Share
Advertisement
செங்கல்பட்டு : சிங்கபெருமாள்கோவில், பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் தேருக்கு கூரை அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.செங்கல்பட்டு அடுத்த, சிங்கபெருமாள்கோவில், பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில், ஹந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலில், 40 ஆண்டுகளாக, தேர் சீரழிந்து இருந்தது.அதன்பின், ஒரு பக்தர், புதிய தேர் செய்வதற்காக, 5 லட்சம் ரூபாய்,
 நரசிம்ம பெருமாள் கோவில்

செங்கல்பட்டு : சிங்கபெருமாள்கோவில், பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் தேருக்கு கூரை அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

செங்கல்பட்டு அடுத்த, சிங்கபெருமாள்கோவில், பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில், ஹந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலில், 40 ஆண்டுகளாக, தேர் சீரழிந்து இருந்தது.அதன்பின், ஒரு பக்தர், புதிய தேர் செய்வதற்காக, 5 லட்சம் ரூபாய், நன்கொடை அளித்தார். 2009ம் ஆண்டு, தேக்கு மரத்தில் புதிய தேர் செய்யப்பட்டு, தேரோட்டம் நடந்தது.ஐந்தாண்டுகளாக, ராஜகோபுரம் திருப்பணி நடந்ததால், தேரோட்டம் நிறுத்தப்பட்டது.

கடந்த ஆண்டு, ராஜகோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.அதன்பின், இரண்டு ஆண்டுகளாக, கொரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கையால், தேரோட்டம் நடைபெறவில்லை. தேர் நிறுத்தப்பட்ட இடத்தில், தரைத் தளத்தில் பள்ளம் ஏற்பட்டு, மழை நீர் தேங்கியது.இதனால், தேர் பாதிப்பு ஏற்படும் என்பதால், தேர் நிறுத்தப்பட்ட தரை தளம் அமைக்க, கோவில் நிர்வாகம் முடிவெடுத்தது.இதையடுத்து, நான்கு மாதங்களுக்கு முன், தேரின் மேல் இருந்த கூரை அப்புறப்படுத்தி, தேரை அதே இடத்தில் அருகில் நிறுத்தினர்.இங்கு, தரை தளம் அமைக்கும் பணி மந்தமாக நடைபெற்று வருகிறது. மேற்கண்ட தேர், மழை, வெயில் பாதிக்கப்படுகிறது. எனவே, தேருக்கு, கூரை அமைக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X