போலீஸ் டைரி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் டைரி

Added : அக் 10, 2021
Share
கொத்தனார் தற்கொலைமணவாள நகர்: கொப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு, 50. கொத்தனார். இவர் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.இவரது மனைவி செல்வி, 20 நாட்களுக்கு முன், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மகள் சரஸ்வதி வீட்டிற்கு சென்று விட்டார்.இந்நிலையில், கடந்த 8ம் தேதி, திருநாவுக்கரசு வீட்டின் அருகில் உள்ள கொட்டகையில் துாணில் புடவையில் துாக்கிட்டு

கொத்தனார் தற்கொலை
மணவாள நகர்: கொப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு, 50. கொத்தனார். இவர் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இவரது மனைவி செல்வி, 20 நாட்களுக்கு முன், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மகள் சரஸ்வதி வீட்டிற்கு சென்று விட்டார்.இந்நிலையில், கடந்த 8ம் தேதி, திருநாவுக்கரசு வீட்டின் அருகில் உள்ள கொட்டகையில் துாணில் புடவையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.தகவலறிந்து மணவாள நகர் போலீசார், உடலைக் கைப்பற்றி, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து, இவரது மனைவி செல்வி அளித்த புகாரையடுத்து, மணவாள நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

ஆட்டோ டிரைவர் தற்கொலை

வெள்ளவேடு: திருமழிசை பகுதியைச் சேர்ந்தவர் ஜேம்ஸ், 42. ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பிரமிளாமேரி. கணவர், மனைவியிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மிகுந்த மன உளைச்சல் அடைந்த ஜேம்ஸ், கடந்த 8ம் தேதி இரவு தன்னுடைய படுக்கையறையில் மின் விசிறியில் புடவையால் துாக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இவரது அலறலை கேட்டு மனைவி மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு, பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், வரும் வழியிலேயே ஜேம்ஸ் இறந்து விட்டதாக கூறினார். இதுகுறித்து பிரமிளாமேரி அளித்த புகாரைஅடுத்து, வெள்ளவேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.ஆண் சடலம் மீட்புதிருத்தணி:

திருத்தணி அடுத்த, தாடூர் பகுதியில் உள்ள விவசாய நிலம் ஒன்றில், 55 வயதான ஆண் ஒருவர் விஷம் குடித்து மயங்கி விழுந்து இறந்துள்ளார். தகவல் அறிந்ததும், கிராம நிர்வாக அலுவலர் திவ்யாபாரதி, சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு, திருத்தணி போலீசில் புகார் கொடுத்தார்.

அதன்படி, போலீசார் ஆண் பிணத்தை மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைத்துள்ளனர். இறந்தவர் பெயர், விலாசம் தெரியவில்லை. மேலும், போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

16 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
நகரி: சித்துார் மாவட்டம், நாராயணவனம் அடுத்த, சமுதாயம் கிராமம் அருகே, பைபாஸ் சாலையில், போலீசார் வாகன சோதனை நடத்தினார். அப்போது அவ்வழியாக வந்த லாரியை மடக்கி சோதனை செய்த போது, 16 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

வாலிபர் தற்கொலை
நகரி: சித்துார் மாவட்டம், ரேணிகுண்டா, பாஞ்சாலி நகரைச் சேர்ந்தவர் சாய்குமார், 31. இவர், நேற்று முன்தினம் வீட்டில் பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார். அவரை திருப்பதி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவர் இறந்தார். ரேணிகுண்டா போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

விபத்தில் பெண் பலிநகரி: குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரியங்கா, 26. இவர், பெங்களூரு பகுதியில் தனியார் பொறியல் துறை நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் பிரியங்கா, நண்பர்கள், கிரண்குமார்,25, வைஷ்ணவி, 24, அம்சா, 23, ரம்யா, 23, சுவேதா, 25 ஆகியோருடன் காரில் பெங்களூரில் இருந்து திருப்பதி நோக்கி சென்றுக் கொண்டிருந்தார்.

அப்போது, சித்துார் மாவட்டம், வால்மீகிபுரம் அருகே, கார் ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் உள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், பிரியங்கா, சம்பவ இடத்திலேயே இறந்தார். மீதமுள்ளவர்கள் படுகாயங்களுடன் மதனப்பள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வால்மீகி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X