கேமரா இல்லை என்றால் மட்டும் கோபப்படுவார் பிரதமர்: ராகுல் தாக்கு!

Updated : அக் 10, 2021 | Added : அக் 10, 2021 | கருத்துகள் (28)
Share
Advertisement
புது டில்லி: பிரதமர் எதற்கு மவுனம் காப்பார், எதற்கு கோபப்படுவார் என ராகுல் டுவிட்டரில் பட்டியல் போட்டுள்ளார். அதில் கேமரா மற்றும் புகைப்பட சந்தர்ப்பங்கள் குறைவாக இருந்தால் பிரதமர் கோபப்படுவார், விலைவாசி உயர்வு, வேலையின்மை, விவசாயிகள், பா.ஜ.க.,வினர் கொல்லப்பட்டால் அமைதியாக இருப்பார் என விமர்சித்துள்ளார்.உத்தர பிரதேசம் லக்கிம்பூரில் போராட்டம் நடத்திய

புது டில்லி: பிரதமர் எதற்கு மவுனம் காப்பார், எதற்கு கோபப்படுவார் என ராகுல் டுவிட்டரில் பட்டியல் போட்டுள்ளார். அதில் கேமரா மற்றும் புகைப்பட சந்தர்ப்பங்கள் குறைவாக இருந்தால் பிரதமர் கோபப்படுவார், விலைவாசி உயர்வு, வேலையின்மை, விவசாயிகள், பா.ஜ.க.,வினர் கொல்லப்பட்டால் அமைதியாக இருப்பார் என விமர்சித்துள்ளார்.



latest tamil news




உத்தர பிரதேசம் லக்கிம்பூரில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது பா.ஜ.க.,வினர் காரை விட்டு மோதினர். அச்சம்பவத்தில் 4 விவசாயிகள் மற்றும் ஒரு பத்திரிகையாளர் என ஐவர் உயிரிழந்தனர். விவசாயிகளின் பதில் தாக்குதலில் பா.ஜ.க., நிர்வாகிகள், மத்திய அமைச்சர் மகனின் கார் ஓட்டுநர் உட்பட மூவர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக பிரதமர் பேச வேண்டும் என சில தினங்களுக்கு முன் காங்., பொதுச் செயலாளர் பிரியங்கா வீடியோ ஒன்றை வெளியிட்டு வலியுறுத்தியிருந்தார்.


latest tamil news



இந்நிலையில் காங்., எம்.பி., ராகுல், பிரதமர் எவற்றிற்கெல்லாம் மவுனமாக இருப்பார், எவற்றிற்கெல்லாம் கோபப்படுவார் என விமர்சித்து பதிவிட்டுள்ளார். “விலைவாசி, பெட்ரோல் விலை உயர்வு, வேலையின்மை, விவசாயிகள் மற்றும் பா.ஜ.க.,வினர் கொல்லப்படுதலுக்கு பிரதமர் அமைதியாக இருப்பார். கேமரா மற்றும் புகைப்பட சந்தர்ப்பங்கள் குறைந்தால், உண்மையான விமர்சனம், அவரது நண்பர்கள் பற்றி கேள்வி எழுப்பினால் பிரதமர் வெகுண்டெழுவார்.” என பதிவிட்டுள்ளார்.

மேலும் ராணுவ தளபதி நரவனே, சீன துருப்புகள் எல்லையில் முகாமிட்டிருப்பதை கூறியிருந்த செய்தியை பகிர்ந்து, அவர்கள் நமது நிலத்தில் இருப்பதாக கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
yavarum kelir - yadhum vore ,இந்தியா
11-அக்-202111:41:19 IST Report Abuse
yavarum kelir நாம கூட சீனாவோட போட்ட ஒப்பந்தம் பத்தி கேட்டா கோவப்படுறோம். அதெல்லாம் வெளிய சொண்ணா என்னாகுறது. விடு ராவுளு.
Rate this:
Cancel
11-அக்-202111:27:08 IST Report Abuse
ஆரூர் ரங் தூர்தர்ஷன் அன்றாடம் உங்க பாட்டி, அப்பா , சித்தப்பா, அம்மா செய்திகளையே முதல் செய்தியாக😴 தினமும் காட்டி போரடிததது மறக்காது. அவங்க வீட்டு வாசலில் நிரந்தரமாக தூர்தர்ஷன் ஆள் இந்தியா ரெடியோ நிருபர் OBV வண்டி நிறுத்தப்பட்டிருந்தது. அட UPA ஆட்சியில் எந்த அரசுப் பதவியிலும் இல்லாத உங்க அம்மாவின் போட்டோ எல்லா அரசு விளம்பரங்களிலும் இடம் பெற்ற அநியாயம்🙄 இப்போது உண்டா? இப்போ சொல்லு யார் விளம்பரப் பிரியர் என்று.
Rate this:
Cancel
11-அக்-202111:22:26 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் தேர்தலில் , கட்சியில் தோற்று ஓடிய பப்பு , வெறுப்பின் உச்ச கட்டத்திற்கு போய்விட்டான் , அடுத்தகட்டமாக சட்டையை கிழித்து கொண்டு அலையவும் வாய்ப்பு இருக்கிறது , அருகில் யாரும் நிற்க வேண்டாம் , அடுத்த தேர்தலில் தோற்றால் கடித்து வைத்து விடுவான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X