அரசியல் செய்தி

தமிழ்நாடு

நாளை! காலை 8 மணிக்கு துவங்குகிறது ஓட்டு எண்ணிக்கை: மக்களின் ஆதரவை அறிய தி.மு.க.., அ.தி.மு.க., ஆர்வம்

Updated : அக் 11, 2021 | Added : அக் 10, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
சென்னை:தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் நடந்து முடிந்த, ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான ஓட்டுகளின் எண்ணிக்கை, நாளை காலை 8:00 மணிக்கு துவங்குகிறது. நேற்று முன்தினம் நடந்த இரண்டாம் கட்ட தேர்தலில், 78.4 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன. இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில், மக்களின் ஆதரவு யாருக்கு என்பதை அறிய, ஆளுங்கட்சியான தி.மு.க.,வும், எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,வும் ஆர்வமாக உள்ளன. இதைத்
நாளை! காலை 8 மணிக்கு துவங்குகிறது ஓட்டு எண்ணிக்கை: மக்களின் ஆதரவை  அறிய தி.மு.க.., அ.தி.மு.க., ஆர்வம்

சென்னை:தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் நடந்து முடிந்த, ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான ஓட்டுகளின் எண்ணிக்கை, நாளை காலை 8:00 மணிக்கு துவங்குகிறது. நேற்று முன்தினம் நடந்த இரண்டாம் கட்ட தேர்தலில், 78.4 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன. இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில், மக்களின் ஆதரவு யாருக்கு என்பதை அறிய, ஆளுங்கட்சியான தி.மு.க.,வும், எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,வும் ஆர்வமாக உள்ளன. இதைத் தொடர்ந்து, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தவும், மாநில தேர்தல் ஆணையம் ஆயத்தமாகி வருகிறது.

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. முதற்கட்ட தேர்தலில், 77.43 சதவீதமும்; இரண்டாம் கட்ட தேர்தலில், 78.47 சதவீதமும் ஓட்டுகள் பதிவாகியுள்ளன. அத்துடன், 28 மாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில், 70.51 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளன.


கட்சிகள் தீவிரம்

உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டது முதலே, ஆளுங்கட்சியான தி.மு.க., தீவிர தேர்தல் பணியில் இறங்கியது. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், ஒன்பது மாவட்டங்களிலும் முகாமிட்டு, தேர்தல் பணிகளை முடுக்கி விட்டனர்.ஒன்பது மாவட்ட குழு தலைவர்கள், 74 ஒன்றிய தலைவர்கள், 2,901 ஊராட்சி தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து பதவிகளையும் மொத்தமாக கைப்பற்ற, ஆளுங்கட்சி திட்டமிட்டு பணிகளை மேற்கொண்டது.

முதல்வரும், தி.மு.க., தலைவருமான ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் செய்யவில்லை. 'சட்டசபை தேர்தலை போல, உள்ளாட்சியிலும் நல்லாட்சி தொடர மக்கள் ஆதரவு தர வேண்டும்' என, 'வீடியோ' பதிவை மட்டும் வெளியிட்டார்.அ.தி.மு.க., தரப்பில், ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

'சட்டசபை தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை, தி.மு.க., நிறைவேற்றவில்லை; மக்களை ஏமாற்றி விட்டது' என குற்றஞ்சாட்டினர். அதற்கு பதிலடி தரும் வகையில், '505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டன' என, தி.மு.க., தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.


நம்பிக்கை

ஆட்சிக்கு வந்தவுடன் வழங்கப்பட்ட 4,000 ரூபாய் கொரோனா நிவாரணம், 14 வகையான இலவச மளிகை தொகுப்பு வினியோகம், மாநகர பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம், கூட்டுறவு நகைக் கடன் தள்ளுபடி உள்ளிட்டவை, தங்களுக்கு வெற்றியை தரும் என்பதில் தி.மு.க.,வினர் உறுதியாக உள்ளனர்.

தி.மு.க.,வின், 'நீட்' தேர்வு ரத்து வாக்குறுதி, கூட்டுறவு கடன் குளறுபடி உள்ளிட்டவை குறித்து அ.தி.மு.க., முக்கிய நிர்வாகிகள் செய்த பிரசாரம், தங்களுக்கு கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் அக்கட்சியினர் உள்ளனர்.


எண்ணிக்கை

இரண்டு கட்ட தேர்தலிலும் பதிவான ஓட்டுகளின் எண்ணிக்கை, நாளை காலை 8:00 மணிக்கு துவங்குகிறது. சட்டசபை தேர்தலுக்குப் பின், இந்த உள்ளாட்சி தேர்தல் நடப்பதால், ஒன்பது மாவட்டங்களில் மக்களின் செல்வாக்கு யாருக்கு உள்ளது என்பதை அறிவதில், தி.மு.க.,வினரும், அ.தி.மு.க.,வினரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சட்டசபை தேர்தலின் போது, அ.தி.மு.க., கூட்டணியில் இருந்த பா.ம.க.,வும், அ.ம.மு.க., கூட்டணியில் இருந்த தே.மு.தி.க.,வும் இத்தேர்தலில் தனித்து போட்டியிட்டன. சீமானின் நாம் தமிழர் கட்சியும் வழக்கம் போல தனித்து களம் இறங்கியது. மூன்றாம் இடத்தை கைப்பற்றுவதில், இந்த கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. இவர்களும், தேர்தல் முடிவுகளை தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளனர்.

இந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் வெற்றியை பொறுத்தே, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தேர்தலை எதிர்கொள்ள தி.மு.க., தலைமை திட்டமிட்டுள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளதால், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான ஆயத்த பணிகளை, மாநில தேர்தல் ஆணையமும் துவக்கி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
John Miller - Hamilton,பெர்முடா
12-அக்-202101:34:25 IST Report Abuse
John Miller ஆதிமுகவினர் தேர்தல் முடிவுகளால் அதிர்ச்சி அடைய போகிறார்கள். அந்த கட்சி வேட்பாளர்கள் பணத்தை செலவளிக்க வில்லை, மக்களிடம் ஒட்டு கேட்கவில்லை என்பதே உண்மை நிலவரம். தேர்தல் முடிவுகள் சசியை கட்சி தலைவர் ஆக்கலாம்.
Rate this:
Cancel
PRAKASH.P - chennai,இந்தியா
12-அக்-202100:00:17 IST Report Abuse
PRAKASH.P Both will get lolipop
Rate this:
Cancel
Godyes - Chennai,இந்தியா
11-அக்-202119:53:08 IST Report Abuse
Godyes மட்டிகள் ஓட்டு திமுகவுக்கு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X