பொது செய்தி

தமிழ்நாடு

ஆதார் திருத்த சிறப்பு முகாம்: அன்னூரில் இன்று துவக்கம்

Added : அக் 10, 2021
Share
Advertisement
கருமத்தம்பட்டி:வாகராயம்பாளையத்தில் நடந்த ஆதார் சிறப்பு முகாமில், 516 பேர் பயனடைந்தனர்.அஞ்சல் துறை மற்றும் வாகராயம்பாளையம், 'உயிர்' சமூக சேவை மையம் சார்பில், ஆதார் சிறப்பு முகாம் நடந்தது.முகாமில், புதிய ஆதார் அட்டை எடுத்தல், செல்போன் எண் இணைத்தல், முகவரி மாற்றம் மற்றும் திருத்தம் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பணிகள் நடந்தன.மேலும், புகைப்படம் புதுப்பித்தல், கைரேகை இணைக்கும்

கருமத்தம்பட்டி:வாகராயம்பாளையத்தில் நடந்த ஆதார் சிறப்பு முகாமில், 516 பேர் பயனடைந்தனர்.அஞ்சல் துறை மற்றும் வாகராயம்பாளையம், 'உயிர்' சமூக சேவை மையம் சார்பில், ஆதார் சிறப்பு முகாம் நடந்தது.முகாமில், புதிய ஆதார் அட்டை எடுத்தல், செல்போன் எண் இணைத்தல், முகவரி மாற்றம் மற்றும் திருத்தம் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பணிகள் நடந்தன.மேலும், புகைப்படம் புதுப்பித்தல், கைரேகை இணைக்கும் பணியும் நடந்தது. இரண்டு நாட்கள் நடந்த முகாமில், பொதுமக்கள், 516 பேர் பயனடைந்தனர்.உயிர் சமூக சேவை மையம் தலைவர் சசிக்குமார் மற்றும் நிர்வாகிகள், தன்னார்வலர்கள், முகாமை ஒருங்கிணைத்தனர்.பதுவம்பள்ளி ஊராட்சி தலைவர் சரவணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.அன்னுாரில் இன்று அன்னுார், பச்சாபாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில், இன்றும், நாளையும், தபால் துறையுடன் இணைந்து, தெற்கு ஒன்றிய பா.ஜ., சார்பில், ஆதார் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.காலை 9:30 முதல் மாலை 5:00 மணி வரை முகாம் நடக்கிறது. இந்த முகாமில், புதிதாக ஆதார் எடுத்தல், ஆதார் அட்டையில் திருத்தம் செய்தல், கைரேகை இணைத்தல், புகைப்படம் புதுப்பித்தல் ஆகிய பணிகள் செய்யப்படும்.புதிதாக ஆதார் அட்டை எடுக்க கட்டணம் இல்லை, திருத்தம் செய்ய 50 ரூபாயும், கைரேகை இணைத்தல் மற்றும் புகைப்படம் புதுப்பிக்க, 100 ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும்,'முகாமுக்கு வருவோர், வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை அல்லது பள்ளிக்கல்வி சான்று, இதில் ஏதாவது ஒன்றின், அசல் மற்றும் நகல் கொண்டு வரவேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X