'சானிடரி நாப்கினில்' மறைத்து போதை பொருள் கடத்திய பெண்

Added : அக் 10, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
மும்பை-போதை பொருள் தடுப்பு படையினர் மும்பை சொகுசு கப்பலில் நடத்திய சோதனையில் கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் தன், 'சானிடரி நாப்கின்' உள்ளே போதை பொருட்களை மறைத்து வைத்து கப்பலுக்குள் எடுத்து சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.ரகசிய தகவல்மும்பை - கோவா இடையே

மும்பை-போதை பொருள் தடுப்பு படையினர் மும்பை சொகுசு கப்பலில் நடத்திய சோதனையில் கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் தன், 'சானிடரி நாப்கின்' உள்ளே போதை பொருட்களை மறைத்து வைத்து கப்பலுக்குள் எடுத்து சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.ரகசிய தகவல்மும்பை - கோவா இடையே சென்ற 'கார்டிலியா' சொகுசு கப்பலில் போதை விருந்து நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போதை பொருள் தடுப்பு படையினர் சொகுசு கப்பலில் கடந்த வாரம் சோதனை நடத்தினர்.அங்கு போதை விருந்து நடத்தியவர்கள் கையும் களவுமாக பிடிபட்டனர். பாலிவுட் நடிகர் ஷாரூக் கானின் மகன் ஆர்யான் கான் மற்றும் அவரது நண்பர்கள் ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் நைஜீரி யாவைச் சேர்ந்த ஒருவர் உட்பட 20 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

தயாரிப்பாளர் இம்தியாஸ் கத்ரி என்பவரது மும்பை வீட்டில் போதை பொருள் தடுப்பு படையினர் நேற்று முன் தினம் சோதனை நடத்தினர். மும்பை புறநகர் பகுதி யான கோரேகாவ்ன் உட்பட பல்வேறு இடங்களில் நேற்று முன் தினம் இரவு அதிரடி சோதனை நடந்தது. சாண்டாகுரூசைச் சேர்ந்த சிவராஜ் ராமதாஸ் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.தெற்கு மும்பையில் உள்ள போதை பொருள் தடுப்பு அலுவலகத்தில் வைத்து நடிகர் ஷாரூக் கானின் கார் டிரைவரிடம் போலீசார் நேற்று முன் தினம் விசாரணை நடத்தினர். சொகுசு கப்பலில் கைதான பெண்ணிடம் விசாரணை நடத்திய போது, பெண்கள் மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தும், 'சானிடரி நாப்கின்' உள்ளே போதை பொருட்களை மறைத்து வைத்து கப்பலுக்குள் எடுத்து வந்தது தெரியவந்தது.

மான நஷ்ட வழக்குதேசியவாத காங்.,கைச் சேர்ந்த மஹாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் கூறுகையில், ''போதை விருந்து நடந்த கப்பலில் இருந்து முதலில் 11 பேரை போலீசார் கைது செய்தனர். ''அதில், பா.ஜ., தலைவர் மோஹித் பாரதியாவின் உறவினர் இருந்துள்ளார். அவர் உட்பட மூவரை சில மணி நேரங்களில் விடுவித்துள்ளனர்,'' என்றார்.இந்த கருத்தை தெரிவித்த அமைச்சர் நவாப் மாலிக் மீது, 100 கோடி ரூபாய் மான நஷ்ட வழக்கு பதிவு செய்யப் போவதாக, பா.ஜ., தலைவர் மோஹித் பாரதியா தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.n. Dhasarathan - chennai,இந்தியா
11-அக்-202110:41:07 IST Report Abuse
K.n. Dhasarathan அந்த மாதர் குல திலகத்திற்கு நாப்கின்னை தவிர வேறு ஆடை கொடுக்காமல் சிறையில் தண்டனை கொடுத்தால் மறுபடி எவரும் அந்த மாதிரி நினைத்து கூட பார்க்கக்கூடாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X