பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டு எண்ணும் பணி 3,533 அலுவலர் பங்கேற்பு

Added : அக் 10, 2021
Share
Advertisement
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்ட, ஊரக உள்ளாட்சி சாதாரண தேர்தல், அச்சிறுப்பாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், லத்துார், திருப்போரூர், திருக்கழுக்குன்றம், காட்டாங்கொளத்துார், புனிததோமையார்மலை ஆகிய ஊரட்சி ஒன்றியங்களுக்கு, இரண்டு கட்டமாக, தேர்தல் நடந்தது.அதைத் தொடர்ந்து, ஓட்டு எண்ணிக்கை மையங்களில், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் செய்ய வேண்டிய, முன்னேற்பாடுகள் குறித்து,
 ஓட்டு எண்ணும் பணி 3,533 அலுவலர் பங்கேற்பு

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்ட, ஊரக உள்ளாட்சி சாதாரண தேர்தல், அச்சிறுப்பாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், லத்துார், திருப்போரூர், திருக்கழுக்குன்றம், காட்டாங்கொளத்துார், புனிததோமையார்மலை ஆகிய ஊரட்சி ஒன்றியங்களுக்கு, இரண்டு கட்டமாக, தேர்தல் நடந்தது.

அதைத் தொடர்ந்து, ஓட்டு எண்ணிக்கை மையங்களில், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் செய்ய வேண்டிய, முன்னேற்பாடுகள் குறித்து, கலெக்டர் ராகுல்நாத் தலைமையில், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், நேற்று, கூட்டம் நடந்தது.இந்த கூட்டத்தில், முதற்கட்ட தேர்தலில், ஓட்டுப்பதிவில், 4 லட்சத்து, 43 ஆயிரத்து, 113 பேரும், இரண்டம் கட்ட ஓட்டுப்பதிவில், 3 லட்சத்து, 76 ஆயிரத்து, 581 பேர், ஓட்டுப் போட்டுள்ளனர்.

எட்டு ஊராட்சி ஒன்றியங்களில், ஓட்டு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த மையங்களில், பதிவான ஓட்டுகளை, நாளை காலை 8;00 மணிக்கு, அந்தந்த மையங்களில், ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. எட்டு ஓட்டு எண்ணும் மையங்களில், ஓட்டுக்கள் எண்ணுவதற்கு,1,107 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 3,533 அலுவலர்கள், ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபடுவர்கள்.ஓட்டு எண்ணும் மையங்களில், 815 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X