சுரண்டிய சாலையை சீரமைப்பது எப்போது?

Added : அக் 10, 2021
Share
Advertisement
அடையாறு : அடையாறில், மூன்று மாதத்திற்கு முன் சுரண்டிய சாலையை சீரமைக்காததால், வாகன ஓட்டிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.அடையாறு மண்டலம், 175வது வார்டு, அடையாறு, காமராஜர் அவென்யூவில், 10க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன.பணி நடக்கவில்லைஇதில், 1வது தெரு சாலை மிகவும் மோசமாக இருந்தது. இதை சீரமைக்க, மூன்று மாதத்திற்கு முன், சாலை சுரண்டப்பட்டது. ஆனால், தார் கலவை போட்டு

அடையாறு : அடையாறில், மூன்று மாதத்திற்கு முன் சுரண்டிய சாலையை சீரமைக்காததால், வாகன ஓட்டிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.

அடையாறு மண்டலம், 175வது வார்டு, அடையாறு, காமராஜர் அவென்யூவில், 10க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன.பணி நடக்கவில்லைஇதில், 1வது தெரு சாலை மிகவும் மோசமாக இருந்தது. இதை சீரமைக்க, மூன்று மாதத்திற்கு முன், சாலை சுரண்டப்பட்டது. ஆனால், தார் கலவை போட்டு புதுப்பிக்கும் பணி நடக்கவில்லை.இதனால், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். அடிக்கடி மழை பெய்வதால், சாலை முன்னே விட மிகவும் மோசமாக உள்ளது.

அதேபோல், கஸ்துாரிபாய் நகர், 8வது பிரதான சாலையும், போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.அச்சம்சாலையில், மழை நீரில் தேங்கி பள்ளம் இருப்பது தெரியாமல், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் சிக்குகின்றனர். வயதானவர்கள், நடப்பதற்கே அச்சப்படுகின்றனர்.பருவமழை அறிவிப்பு வரும் போது, சாலை சீரமைப்பு பணிகள் கிடப்பில் போடப்படும். அதற்கு முன், சீரமைப்புக்காக சுரண்டிய சேதமடைந்த சாலைகளை புதுப்பிக்க வேண்டும் என, பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X