கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சத்துணவு அமைப்பாளர் பணி தில்லுமுல்லு நியமனம் ரத்து

Added : அக் 10, 2021
Share
Advertisement
சென்னை-தில்லுமுல்லுவால் வாய்ப்பு மறுக்கப்பட்ட பெண்ணுக்கு, சத்துணவு அமைப்பாளர் பணி வழங்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திருவண்ணாமலை மாவட்டம், கல்லாயி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில், சத்துணவு அமைப்பாளர் பணிக்கு நியமிக்கக் கோரி, அதே கிராமத்தைச் சேர்ந்த பி.தமிழ்செல்வி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.மனுவில், 'சத்துணவு அமைப்பாளர்

சென்னை-தில்லுமுல்லுவால் வாய்ப்பு மறுக்கப்பட்ட பெண்ணுக்கு, சத்துணவு அமைப்பாளர் பணி வழங்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், கல்லாயி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில், சத்துணவு அமைப்பாளர் பணிக்கு நியமிக்கக் கோரி, அதே கிராமத்தைச் சேர்ந்த பி.தமிழ்செல்வி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.மனுவில், 'சத்துணவு அமைப்பாளர் பணிக்கு 2009 ஜனவரியில் நேர்முகத் தேர்வு நடந்தது. நியமன உத்தரவை அமைச்சர் வழங்கினார். பின், நியமன உத்தரவில் தவறு இருப்பதாக கூறி, அதை திரும்ப பெற்றனர்.

'எனக்கு நியமன உத்தரவு வழங்குவதற்கு பதில், எஸ்.தமிழ்செல்வி என்பவரை நியமித்தனர். 'ஆனால், அவருக்கு தகுதி இல்லை. அதே கிராமத்தைச் சேர்ந்த எனக்கு நியமனம் வழங்கவில்லை' என்று கூறியிருந்தார்.மனுவை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார். கோப்புகளை வரவழைத்து பரிசீலித்தார். மனுதாரரான பி.தமிழ்செல்வி, அதே கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும், எஸ்.தமிழ்செல்வி, இரண்டு கி.மீ., தொலைவில் வசிப்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து, நீதிபதி வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு:விளம்பரத்தில் சத்துணவு அமைப்பாளர் பணிக்கு, அதே கிராமத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மனுதாரரைப் பொறுத்தவரை, அந்த கிராமத்தில் தான் வசிக்கிறார். இரண்டு கி.மீ., தொலைவில், எஸ்.தமிழ்செல்வி வசிக்கிறார். அவரை நியமிப்பதற்காக தில்லுமுல்லு நடந்துள்ளது.எனவே, எஸ்.தமிழ்செல்வி நியமனம் ரத்து செய்யப்படுகிறது. மனுதாரரான பி.தமிழ்செல்விக்கு, பணி நியமனம் வழங்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.இந்த உத்தரவை அமல்படுத்தும் விதமாக, பி.தமிழ்செல்வியை நியமித்து, திருவண்ணாமலை கலெக்டர் பிறப்பித்த உத்தரவை, நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் தாக்கல் செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X