பொது செய்தி

தமிழ்நாடு

முறைகேடாக மின் இணைப்பு; ஆய்வில் ஈடுபடுமா வாரியம்?

Added : அக் 10, 2021
Share
Advertisement
சென்னை-விதிகளை மீறி கட்டப்படும் கட்டடங்களுக்கு, முறைகேடாக மின் இணைப்புகள் வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்து உள்ளன.அரசு அனுமதி அளித்துள்ள விதிகளை பின்பற்றி, கட்டடம் கட்டுவோருக்கு மட்டுமே மின் இணைப்பு வழங்கப்பட வேண்டும். சிலர் அனுமதி பெற்றதை விட, கூடுதல் தளங்களை எழுப்பி மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கின்றனர். அதை, மின் வாரிய பொறியாளர்களும் ஆய்வு செய்யாமல், 'ஆதாயம்'

சென்னை-விதிகளை மீறி கட்டப்படும் கட்டடங்களுக்கு, முறைகேடாக மின் இணைப்புகள் வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்து உள்ளன.

அரசு அனுமதி அளித்துள்ள விதிகளை பின்பற்றி, கட்டடம் கட்டுவோருக்கு மட்டுமே மின் இணைப்பு வழங்கப்பட வேண்டும். சிலர் அனுமதி பெற்றதை விட, கூடுதல் தளங்களை எழுப்பி மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கின்றனர். அதை, மின் வாரிய பொறியாளர்களும் ஆய்வு செய்யாமல், 'ஆதாயம்' பெற்று முறைகேடாக இணைப்பு வழங்குகின்றனர்.மேலும், 100 யூனிட் வரை இலவசம்; 500 யூனிட் வரை மானிய விலையில் மின் கட்டணம் போன்ற சலுகைகளை பெற, பல வீடுகளில், ஒரே வீட்டில் அறைக்கு தனி மீட்டர். மோட்டார் பம்புக்கு தனி மீட்டர், பொது இடத்திற்கு தனி மீட்டர் என மூன்றுக் கும் மேற்பட்ட மின் இணைப்புகளை பெற்றுள்ளனர்.

இதற்கு, மின் வாரியத்தில் பணிபுரிவோரும் உடந்தையாக உள்ளனர். இது குறித்து, மின் ஊழியர்கள் கூறியதாவது:விதிகளை மீறியும், நீர்நிலைகளை ஆக்கிரமித்தும் கட்டப்படும் கட்டடங்களுக்கு மின் இணைப்பு வழங்குமாறு, அதிகாரிகளுக்கு அரசியல்வாதிகள் நெருக்கடி தருகின்றனர். அவர்கள் எங்களுக்கு நெருக்கடி தருகின்றனர்.இரண்டாவது தளத்தில் தனி சமையல் அறையுடன் வசித்தால் மட்டுமே, கூடுதல் இணைப்பு வழங்கப்பட வேண்டும்.

ஆனால், மொட்டை மாடியை காட்டியும், தளமே இல்லாத நிலையிலும், கூடுதல் மின் இணைப்பு கேட்கின்றனர்.அந்த கட்டடங்களுக்கு ஆய்வுக்கு சென்றால், விரைந்து மின் இணைப்பு வழங்குமாறு, அங்குள்ள அரசியல்வாதிகளை வைத்து மிரட்டுகின்றனர். எனவே, ஒரு மாவட்ட அதிகாரிகளை மற்றொரு மாவட்டத்திற்கு அனுப்பி, முறைகேடான மின் இணைப்புகள் குறித்து ஆய்வு செய்து, அவற்றை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X