தமிழ்நாடு

காஞ்சி, செங்கையில் 2.73 லட்சம் பேர் ஓட்டளிக்கவில்லை தேர்தல் விழிப்புணர்வு குறைவு என புகார்

Added : அக் 10, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், இரு கட்டங்களாக நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில், 2.73 லட்சம் பேர் ஓட்டளிக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தலில், முதற்கட்ட ஓட்டுப்பதிவு, காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத் ஆகிய மூன்று ஒன்றியங்களில், கடந்த 6ம் தேதி நடைபெற்றது.இந்த மூன்று ஒன்றியங்களில், அதிகபட்சமாக வாலாஜாபாத்


காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், இரு கட்டங்களாக நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில், 2.73 லட்சம் பேர் ஓட்டளிக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தலில், முதற்கட்ட ஓட்டுப்பதிவு, காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத் ஆகிய மூன்று ஒன்றியங்களில், கடந்த 6ம் தேதி நடைபெற்றது.இந்த மூன்று ஒன்றியங்களில், அதிகபட்சமாக வாலாஜாபாத் ஒன்றியத்தில், 86.4 சதவீதம் ஓட்டுப்பதிவானது. முதற்கட்ட தேர்தலில், இந்த மூன்று ஒன்றியங்களிலும், ஆண், பெண், திருநங்கை என, 3 லட்சத்து, 16 ஆயிரத்து, 911 ஓட்டுகள் உள்ளன.ஆனால், 2 லட்சத்து, 67 ஆயிரத்து, 144 ஓட்டுகள் தான் பதிவாகின.

மீதமுள்ள, 49 ஆயிரத்து, 767 பேர் ஓட்டளிக்கவே வரவில்லை.அதேபோல், இரண்டாம் கட்ட தேர்தல், நேற்று முன்தினம் ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார் ஆகிய இரு ஒன்றியங்களில் நடைபெற்றது, 72.33 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளன. ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில் 86.87 சதவீதமும், குன்றத்துாரில் 67.38 சதவீதமும் பதிவாகியுள்ளது. இரு ஒன்றியங்களில், ஆண், பெண், திருநங்கை என, 3 லட்சத்து, 69 ஆயிரத்து 99 வாக்காளர்கள் உள்ளனர். ஆனால், 2 லட்சத்து,66 ஆயிரத்து, 986 பேர் வாக்குஅளித்தனர். மீதமுள்ள, ஒரு லட்சத்து, 2 ஆயிரத்து, 113 பேர் ஓட்டளிக்க வரவே இல்லை.

மொத்தமாக, இரு கட்ட தேர்தலில், 1.51 லட்சம் பேர் ஓட்டளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இதற்கு முக்கிய காரணமாக, மாவட்ட நிர்வாகம் சார்பில், தேர்தல் விழிப்புணர்வு பணிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.செங்கல்பட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில், இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தலில், 1 லட்சத்து, 22 ஆயிரத்து, 166 பேர் ஓட்டுபோடவில்லை.செங்கல்பட்டு மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தல், இரண்டாம் கட்ட தேர்தல் நான்கு ஊராட்சி ஒன்றியங்களுக்கு, நேற்று முன்தினம் நடந்தது.இதில், காட்டாங்கொளத்துார் ஊராட்சி ஒன்றியத்தில், மொத்த வாக்காளர்கள் 2 லட்சத்து, 39 ஆயிரத்து, 750 பதிவான ஓட்டு 1 லட்சத்து, 54 ஆயிரத்து, 957, சதவீதம் 64.63, ஓட்டு போடதவர்கள் 8 லட்சத்து, 4 ஆயிரத்து, 793.மதுராந்தகம்

ஊராட்சி ஒன்றியத்தில், மொத்த வாக்காளர்கள் 9 லட்சத்து, 9 ஆயிரத்து, 765, பதிவானது 87 ஆயிரத்து, 653, சதவீதம் 87.86, ஓட்டுபோடாதவர்கள், 12 ஆயிரத்து, 112 பேர்.அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில், மொத்த வாக்காளர்கள் 82 ஆயிரத்து, 30 பேர், பதிவானது 69 ஆயிரத்து, 923, சதவீதம் 85.24, ஓட்டு போடாதவர்கள் 12 ஆயிரத்து, 107.சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்தில், மொத்த வாக்காளர்கள் 77 ஆயிரத்து, 203, பதிவானது 64 ஆயிரத்து, 49, சதவீதம் 82.96, ஓட்டு போடதவர்கள் 13 ஆயிரத்து, 154. மொத்த வாக்காளர்கள் 4 லட்சத்து, 98 ஆயிரத்து, 748, பதிவானது 3 லட்சத்து, 76 ஆயிரத்து, 582, சதவீதம் 75.51, ஓட்டு போடதவர்கள் 1 லட்சத்து, 22 ஆயிரத்து, 166 பேர் என, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- நமது நருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X