பொது செய்தி

தமிழ்நாடு

சினிபிட்ஸ்

Added : அக் 10, 2021
Share
Advertisement
கோல்மால் கூட்டணிஜீவா, மிர்ச்சி சிவா இணைந்து நடிக்கும் படம் கோல்மால். கே.எஸ்.ரவிக்குமார், பாக்கியராஜ் ஆகியோரிடம் பணியாற்றிய பொன்குமரன் இயக்குகிறார். 'முழுநீள நகைச்சுவையுடன் உருவாகும் இப்படத்தில், பாயல் ராஜ்புத் மற்றும் தான்யா ஹோப் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். முரளி சர்மா, யோகி பாபு, சோனியா அகர்வால், மனோபாலா, கருணாகரன், ரமேஷ் கண்ணா, நரேன், ஜார்ஜ் மரியான், சஞ்சனா சிங்,

கோல்மால் கூட்டணிஜீவா, மிர்ச்சி சிவா இணைந்து நடிக்கும் படம் கோல்மால். கே.எஸ்.ரவிக்குமார், பாக்கியராஜ் ஆகியோரிடம் பணியாற்றிய பொன்குமரன் இயக்குகிறார். 'முழுநீள நகைச்சுவையுடன் உருவாகும் இப்படத்தில், பாயல் ராஜ்புத் மற்றும் தான்யா ஹோப் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். முரளி சர்மா, யோகி பாபு, சோனியா அகர்வால், மனோபாலா, கருணாகரன், ரமேஷ் கண்ணா, நரேன், ஜார்ஜ் மரியான், சஞ்சனா சிங், மொட்டை ராஜேந்திரன், பஞ்சு சுப்பு, சாது கோகிலா, விபின் சித்தார்த் உள்ளிட்ட பலநட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. முழு படப்பிடிப்பும் மொரிஷியசில் படமாக உள்ளது.காதலரை அறிமுகப்படுத்திய ரகுல் தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். சமீபத்தில் பிறந்தநாளை கொண்டாடிய அவர், தன் காதலரை அறிமுகம் செய்தார்.ஹிந்தியில் நடிகர், தயாரிப்பாளராக இருந்து வரும் ஜாக்கி பாக்நானியுடன் இருக்கும் படத்தை 'இன்ஸ்டாகிராமில்' ரகுல் வெளியிட்டுள்ளார். அதில், 'இன்னும் ஒன்றாகச் சேர்ந்து, அதிக நினைவுகளை உருவாக்குவதற்கு நன்றி' என, அவர் பதிவிட்டுள்ளார்.தண்ணீருக்குள் கவர்ச்சி தெலுங்கு நடிகையான ஈஷா ரெப்பா, தமிழில் ஓய் என்ற படத்தில் அறிமுகமானார்.தற்போது, ஆயிரம் ஜென்மங்கள், ஒட்டு போன்ற படங்களில் நடித்து வருகிறார்.அவர், கவர்ச்சி உடையணிந்து, தண்ணீருக்குள் நின்று, தன்னைச்சுற்றி பூக்களை துாவியபடி போஸ் கொடுக்கும் கிளாமர் போட்டோக்களை, 'இன்ஸ்டாகிராமில்' வெளியிட்டுள்ளார். அந்த போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.சாய் பல்லவிகூந்தல் ரகசியம்தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சாய் பல்லவி, அதிகம் 'மேக்கப்' போடாத இயற்கையான அழகின் ரகசியத்தை வெளியிட்டு உள்ளார். அவர் கூறுகையில், 'இயற்கையான கற்றாழை போன்ற பொருட்களையே கூந்தல் மற்றும் உடம்புக்கு பயன்படுத்திக் கொண்டு வருகிறேன். சினிமாவிற்காக கூட நான் கூந்தலில் ஹேர் கலரிங் செய்து கொள்வதில்லை' என்றார்.புனேயில் படம்துவக்கம்ராம்சரண் நடிக்க ஷங்கர் இயக்கும் பான் இந்தியா படத்தின் பூஜை, கடந்த மாதம் ஐதராபாதில் நடந்தது. ஹிந்தி நடிகை கியாரா அத்வானி நாயகியாக நடிக்கிறார்.அக்., 21 முதல், புனேயில் படப்பிடிப்பு துவங்குகிறது.-சிம்புவுடன் பாடிய சிவாங்கிபாடகி, தொகுப்பாளினி, நடிகை என, பல அவதாரங்களை எடுத்து, ரசிகர்களை கவர்ந்து வருகிறார் சிவாங்கி. ராஜேஷ் கண்ணா இயக்கும் மாயன் படத்தில், நடிகர் சிம்பு உடன் இணைந்து 'மச்சி' என்ற டூயட் பாடலை பாடியுள்ளார். விரைவில் இந்த பாடல் வெளியாகிறது.யாரை சொல்கிறார் செல்வராகவன்?நடிகராகவும் பயணித்து வரும் இயக்குனர் செல்வராகவன் டுவிட்டரில், 'இன்னொருவர் நன்றாக இருக்கக் கூடாது என்று நினைத்தீர்கள் என்றால்; அந்த நொடியே உங்களுக்கு குழி தோண்டப்படும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்' என, பதிவிட்டுள்ளார். இதற்கு, ரசிகர்கள் பலரும் தனுஷ் -- சிவகார்த்திகேயன் இடையே உள்ள மோதலை குறிப்பிட்டு, கருத்து பதிவிட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X